நடிகை ரோஜா கொடுத்த ஒன்றரை கோடி கிஃப்ட்.. குவியும் வாழ்த்தும், கண்டனமும்.. என்ன நடந்தது?
நடிகை ரோஜா தன் மகனுக்கு பென்ஸ் காரை பரிசாக தந்துள்ளார்
சென்னை: தன்னுடைய மகனுக்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான பென்ஸ் காரை நடிகை ரோஜா கிப்ட் ஆக தந்திருக்கிறார்.. இது தற்போது சர்ச்சையை கிளப்பிவிட்டு வருகிறது.
நடிகை ரோஜா, தமிழ், தெலுங்கு சினிமா உலகில் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்றவர்.. 90களில் மிகவும் பிரபலமாக திரையுலகில் வலம் வந்தவர்.
சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், திடீரென அரசியலிலும் என்ட்ரி தந்தார்.. ஆந்திர அரசியலில் ஃபயர் பிராண்ட் என்ற பெயரை பெற்றவர் நடிகை ரோஜா..

ரோஜா
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பல அதிரடிகளை செய்தனர்.. ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா, மேற்கொண்ட செயல்திட்டங்களும், அறிவிப்புகளும் மக்களிடம் விரைந்து சென்றடைந்தன.. இந்த அதிரடிகளுக்கு தனக்கு பெரிதும் காரணமாக இருப்பது மறைந்த ஜெயலலிதா தான் என்றும், அவரது பாணியையே தான் கையில் எடுத்து வருவதாகவும் அடிக்கடி நெகிழ்ச்சியுடன் சொல்லி வருபவர்...

பென்ஸ் கார்
சமீபத்தில் இவருக்கு அமைச்சர் பதவியும் தானாகவே தேடி வந்தது... சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஜா, தன்னுடைய மகனுக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் காரை பரிசாக வழங்கியுள்ளார்... ரிஜிஸ்டிரேஷன் செய்யப்பட்ட புது காருக்கு முன்பு, மகனும், ரோஜாவும் நிற்பது போன்ற போட்டோவும் இணையத்தில் வைரலானது.

ரோஜா
இதற்கு பலரும் ரோஜாவுக்கும் அவரது மகனுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. அதேசமயம், பலர் கடுமையாகவும் விமர்சித்து வருகின்றனர்.. காரணம், ரோஜா சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில், நான் ஒரு சாதாரண பெண்.. பணக்காரி கிடையாது.. கஷ்டப்பட்டுதான் மேலே வந்துள்ளேன் என்று கூறியிருந்தார்.. அந்த பேட்டியின் வீடியோவை பதிவிட்டு, எப்படி திடீரென சம்பாதித்துவிட்டீர்கள்? 'அமைச்சரானதால் சம்பாதித்து விட்டீரா என்று கேட்டு வருகிறார்கள்...

வதந்திகள்
இதற்கு ரோஜாவின் ரசிகர்களும், தொண்டர்களும் பதிலளித்து வருகின்றனர்.. சினிமாவில் நீண்ட காலம் கடினமாக உழைத்தவர் ரோஜா. டிவி தொடர்களிலும், பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று சம்பாதித்துள்ளார். அப்படி இருக்கும்போது, கார் வாங்க முடியாதா? அரசியல் காழ்ப்புணர்ச்சியால் யாரோ கிளப்பிவிடும் வதந்தி இது.. வாங்க முடியாத அளவுக்கு மோசமான நிலையில் ரோஜா இல்லை என்றும் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications