Sai Dhanshika Vishal: 'என்ன பேபி சொல்லிறலாமா?' விஷாலிடம் அனுமதி வாங்கி! காதல் கதையை சொன்ன தன்ஷிகா
சென்னை: தனக்கும் விஷாலுக்கும் எப்படி காதல் ஏற்பட்டது என்பது குறித்து நடிகை சாய் தன்ஷிகா விளக்கமளித்துள்ளார். திருமண தேதியை சொல்வதற்கு முன்னர் தன்ஷிகா, விஷாலிடம் என்ன கேட்டார் தெரியுமா?

விஷால் தனக்கு 4 மாதங்களில் திருமணம் நடைபெறும் என கூறியிருந்தார். இந்த நிலையில் யார் பெண்ணாக இருக்கும் என அலசியதில் இன்று காலை முதலே சாய் தன்ஷிகா என பலர் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் யோகிடா பட இசை வெளியீட்டு விழாவில் விஷால் கலந்து கொள்வதால் திருமணம் குறித்த அறிவிப்பும் மணப்பெண் யாரென்பது குறித்து வெளியாகும் என சொல்லப்பட்டது.
அந்த வகையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் சாய் தன்ஷிகா பேசுகையில், இந்த இசை வெளியீட்டு விழா மேடையை என்ன மாதிரியான மேடையாக மாற்றியிருக்கிறார்கள் என்பது இங்கு வந்ததற்கு அப்புறம்தான் புரிந்தது. நான் சினிமாவுக்குள் வந்து 17 வருடங்கள் ஆகின்றது.
முக்கியமான மேடை
இது எனக்கு முக்கியமான மேடை. என்ன பேசுவது என எனக்கு தெரியவில்லை. இந்த நாளை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு கடவுள் மிகவும் நன்றி. என்னை வளர்த்த எனது மாமா அருண் கடந்த ஆண்டு தவறிவிட்டார். இந்த நாளை அவர் கனவாக நினைத்திருந்தார்.
என்னை வைத்து படம் எடுத்த மாமா
சினிமாவில் எனக்கான இடத்தை பிடிக்கவும் எனக்கான சரியான வாய்ப்புகள் அமையவும் போராடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான், "நீ வாடா உன்னை வைத்து நான் ஒரு படம் எடுக்கிறேன்" என சொன்ன அந்த மாமா இல்லாதது எனக்கு மிகவும் வருத்தம். இந்த படம் ஆரம்பித்து 4, 5 வருடங்கள் ஆகிவிட்டது.
உழைப்பு
நான் உழைப்பை மட்டுமே நம்பியிருந்தேன். பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு ஏதேனும் தவறாக நடந்தால் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லவாவது தன்னம்பிக்கை கிடைக்கும்.
தற்காப்பு கலைகள்
நானும் தற்காப்பு கலைகளை கற்றுள்ளேன். எனவே இந்தியா முழுக்க குழந்தைகளும் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள பேரணி நடத்த எனக்கு ஆசையுள்ளது.
மேடையில் அறிவிப்பு
இந்த மேடையை அறிவிப்பு மேடையாக்க நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை என கூறியபடியே என்ன பேபி என விஷாலை பார்த்து கேட்டார். தன்ஷிகா தொடர்கையில், இன்று காலை சில பத்திரிகைகளில் நானும் விஷாலும் காதலிக்கும் விஷயம் வந்தது. இதன் பிறகும் உங்களுடன் நண்பர்களாகவும் உறவினர்களாகவும் பயணிக்கும் நிலையில் மறைக்க விரும்பவில்லை.
என்ன பேபி
என்ன பேபி சொல்லிறலாமா? நாங்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளோம். எனக்கு 15 ஆண்டுகளாக விஷாலை தெரியும். என்னை எங்கு பார்த்தாலும் மரியாதையுடனே நடந்து கொள்வார். எனக்கு ஒரு பிரச்சினை என்றால் குரல் கொடுத்திருக்கிறார். எனக்கு தெரிந்து என் வீட்டிற்கு எந்த ஹீரோவும் வந்ததில்லை.
மகிழ்ச்சியாக வைத்திருப்பேன்
ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை நடக்கும் போது அவர் என் வீட்டிற்கு வந்திருந்தார். அண்மையில்தான் நாங்கள் இருவரும் பேச ஆரம்பித்தோம். அப்போதுதான் எங்களுக்கு காதல் ஏற்பட்டது. நான் அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன். நல்ல மனிதர். அவரை நல்லபடியாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு சாய் தன்ஷிகா தெரிவித்திருந்தார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications