"கவர்ச்சி".. ஆமா, ஷகீலாவுக்கும் காங்கிரஸுக்கும் என்ன சம்பந்தம்.. பாஜகவின் ரூட்டை பிடித்து.. எடுபடுமா
நடிகை ஷகிலா காங்கிரஸில் இணைந்தார்
சென்னை: பிரபல நடிகை ஷகிலா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்... அதற்கான அடையாள அட்டையையும் இன்று பெற்று கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஷகீலா...
கவர்ச்சி தவிர, காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.. சில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.. சில சீரியல்களும் அடக்கம்.

பிரசாரம்
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸில் இணைந்துள்ளார். அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நியமனத்தை அத்துறையின் தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் பிறப்பித்துள்ளார்.விரைவில் உறுப்பினர் அட்டையையும் பெற்றுக் கொண்டு, அக்கட்சிக்காக பிரசாரம் செய்வார் என்றும் தெரிகிறது.

அரசியல்வாதி
அடிப்படையில் ஷகிலா ஒரு அரசியல்வாதி இல்லை.. மக்களுக்காக சிறை சென்றவர் இல்லை.. எந்தவித போராட்டம், ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொண்டவரும் இல்லை... தினம் தினம் பசி, பட்டினியால் செத்து சுண்ணாம்பு ஆகும் சாமான்ய மக்களுக்காக கூட எதையுமே செய்ததும் இல்லை.. நூற்றாண்டு கால காங்கிரஸ் கட்சியின் அருமை பெருமைகள், உயிரையே தந்த தியாகிகள் குறித்தெல்லாம் முழுவதுமாக தெரிய வாய்ப்பில்லை. இருந்தாலும் அவருக்கு முக்கிய பொறுப்பு தரப்பட்டுள்ளது.

நமீதா
ஷகிலாவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று நம்மால் கேட்க முடியாது.. ஏனென்றால் பாஜகவுக்கும் நமீதாவுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வியையும் நாம் கேட்க வேண்டி வரும்.. அதனால் ஷகிலா கட்சியில் சேர்ந்தது அவரது உரிமை.. அவரது விருப்பம்.. தனிமனித ஈடுபாடு.. அதை பற்றி கருத்து சொல்வதற்கில்லை.

குஷ்பு
ஆனால்,நமக்கு 2 சந்தேகங்கள் எழுகின்றன.. முதலாவதாக, பாஜகவை போலவே காங்கிரசும் கவர்ச்சி அரசியலை நம்ப ஆரம்பித்துவிட்டதா? மற்றொன்று, புதிதாக வந்தவருக்கு பொறுப்பு தந்து அரவணைக்கும் இதே கட்சி, ஏன் அனுபவமும் திறமையும் வாய்ந்த் குஷ்புவை கைநழுவ விட்டது? என்பதே நமது சந்தேகம்.

எடுபடுமா?
கவர்ச்சி அரசியல் வடமாநிலங்களில் ஒர்க் அவுட் ஆகிறது.. ஆனால், நமக்கு அது எடுபடுமா என தெரியவில்லை.. இப்படித்தான் அன்னைக்கு ஜீவஜோதியை கட்சியில் சேர்த்தார்கள், அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.. ஓட்டுக்களை அள்ள வெறும் பரிச்சயமான முகங்கள் மட்டும் போதுமா? இப்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது.. இந்த கூட்டணிக்காகத்தான் ஷகீலா பிரசாரம் செய்வார் என தெரிகிறது... ஆனால் ஒன்று, நமீதாவை பார்ப்பதற்காக திரளும் கூட்டம், ஷகீலாவையும் பார்த்துவிட்டு செல்லும்.. அவ்வளவுதான்..!
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications