அசிங்கம்.. இவங்க தவறான முறையில் பிரபலமானவங்க! வாடிப் போன ’சிறகடிக்க ஆசை’ ஸ்ருதி நாராயணன் முகம்!
சென்னை: சர்ச்சை வீடியோவில் சிக்கி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட சிறகடிக்க ஆசை நடிகை ஸ்ருதி நாராயணன் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் வீரமங்கை வேலுநாச்சியார் போஸ்டரை அவர் வெளியிட்ட நிலையில் இவரை வைத்து ஏன் வெளியிட வேண்டும் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப மேடையிலேயே அவரது முகம் வாடிப் போனது.
கல்லூரி படிப்பை முடித்த பிறகு கார்த்திகை தீபம் சீரியலில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி நாராயணன், தொடர்ந்து குமரன் இயக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் மாதத்திற்கு ஒருமுறை அவர் சீரியலில் முகம் காட்டினாலே அதிசயம் தான். இந்த நிலையில் அவருக்கென தனியாக ஒரு ட்ராக் உருவாக்கப்பட்டு அவருக்கான காட்சிகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ரோகிணிக்கு தோழி கேரக்டராக மட்டுமே வந்து கொண்டிருந்த அவர் தற்போது அவருக்கென தனியாக காதல் டிராக், மீனாவுடன் நெருக்கம் என வாரத்திற்கு இரண்டு மூன்று எபிசோடுகளாவது வந்து விடுகிறார்.

தொடர்ந்து சினிமா பக்கமும் தலைகாட்டிய நிலையில் தான் சர்ச்சை ஒன்று வெடித்தது. பட வாய்ப்புக்காக இயக்குனர் ஒருவருடன் உடைகள் இன்றி வீடியோ காலில் பேசியதாக பரபரப்பு எழுந்தது. தொடர்ந்து அந்த வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது எனக் கூறப்பட்டது. பின்னர் தான் அது உண்மையான வீடியோ என தெரிய வந்தது. இந்த நிலையில் தனது வீடியோவை பரப்புபவர்கள் தங்கள் வீட்டின் பெண்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என ஸ்ருதி நாராயணன் அறிக்கை கொடுத்திருந்தார்.
அதற்கு பிறகு இந்த விவகாரம் முடிந்து போனது. பின்னர் ஒரு சில நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்ட நிலையில் தற்போது மீண்டும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறார். விஜய் கௌரிஸ் நடிக்க கடுக்கா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டரை ஸ்ருதி நாராயணன் இன்று வெளியிட்டார். அதில் வீரமங்கை வேலுநாச்சியாரின் புகைப்படம் இருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த சில பத்திரிகையாளர்கள்," பெண்களின் அடையாளமாக போற்றப்படும் வேலுநாச்சியார் ஒரு வீரமங்கை. ஆபாச வீடியோ மூலம் விமர்சனத்திற்கு உள்ளான ஸ்ருதி நாராயணனை வைத்து வீரமங்கையின் போஸ்டரை வெளியிடுவது அவரை கேவலப்படுத்துவது போல் இல்லையா" என திடீர் கேள்வி எழுப்பினர்.
அப்போது மேடையில் இருந்த சுருதி நாராயணன் பதட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும் பத்திரிகையாளர்களின் கேள்வியால் அவரது முகம் வாடிப்போனது. இருந்த போதும் சமாளித்தவாறே படம் தனக்கு ரொம்ப பிடித்திருந்தது. பெண்களை மையப்படுத்திய படம் என்பதால் படத்திற்கு ஆதரவை கொடுப்பதற்காக வந்திருக்கிறேன்" எனக் கூறி சமாளித்தார்.
இதனை கவனித்த படத்தின் ஹீரோ விஜய் கௌரிஸ், "தவறான முறையில் பிரபலமானவர் என நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் எனக்கு தெரியவில்லை.. படத்திற்கு ஆதரவு கொடுக்கவே ஸ்ருதி நாராயணன் வந்திருக்கிறார் பெண்களை நாம் உயர்வாக நினைக்கிறோம். பெண்களுக்கு ஆதரவு கொடுக்கும் படம் என்பதால் அவர் வந்திருக்கிறார்" எனக் கூறி சமாளித்தார்.
தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் ஒரு தரப்பு ஸ்ருதி நாராயணனுக்கு ஆதரவும் மற்றொரு தரப்பு எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications