சென்னை ஈசிஆரில் நடிகை ஸ்ரீதேவியின் சொத்தை அபகரிக்க முயற்சி.. ஐகோர்ட்டில் கணவர் போனி கபூர் வழக்கு
சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவி சொத்துக்கு 3 பேர் உரிமை கோருவதாக, அவரது கணவர் போனி கபூர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் சொத்தை போலியான வாரிசு சான்றிதழ் பெற்று 3 பேர் உரிமை கோருவதாக தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் 4 வாரத்தில் தாம்பரம் போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமாக சென்னை ஈசிஆரில் சொத்து உள்ளது. இந்த நிலையில் இந்த சொத்துக்கு 3 பேர் உரிமை கோருவதாக அவரது கணவர் போனி கபூர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தாம்பரம் போலீசாருக்கு உத்தரவு
சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் சொத்தை போலியான வாரிசு சான்றிதழ் பெற்று 3 பேர் உரிமை கோருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த மனுவை இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர். தொடர்ந்து இது குறித்து 4 வாரத்தில் தாம்பரம் போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
போனி கபூர் மனுவில் கூறியது என்ன?
ஸ்ரீதேவி கடந்த 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அந்த சொத்தை வாங்கியதாகவும், அன்று முதல், ஸ்ரீதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தச் சொத்தை முழுமையாகப் பயன்படுத்தி வருவதாக கணவர் போனி கபூர் தனது மனுவில் கூறியுள்ளார்.
மேலும், தற்போது அந்த சொத்து பண்ணை வீடாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த நிலம், முதலில் முதலில் எம்.சி. சம்பந்த முதலியார் என்பவருக்குச் சொந்தமானதாக இருந்தது. அவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் இருந்தனர். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே 1960 ஆம் ஆண்டு சொத்து பிரிவினை செய்யப்பட்டு 1960ல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
திடீரென 3 பேர் உரிமை கோருகிறார்கள்
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான், ஸ்ரீதேவி சொத்தை வாங்கினார். விற்பனை பத்திரத்தையும் முறையாக பதிவு செய்து வைத்து இருந்தார். இந்த நிலையில், திடீரென்று 3 பேர் தங்களுக்கு இந்த சொத்தில் பங்கு இருப்பதாக கூறுகிறார்கள். அவர்கள் தாக்கல் செய்துள்ள வாரிசுரிமை சான்றிதழ் போலியானது எனவும், அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் போனி கபூர் தனது மனுவில் கோரியுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி
தமிழ் திரையுலகில் 80 களில் கோலோச்சிய நடிகை ஸ்ரீ தேவி. பாலிவுட் திரையுலகிலும் சென்று இந்திய திரையுலகமே வியக்கும் அளவுக்கு திரையுலகில் உச்சம் தொட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஸ்ரீதேவி திரையுலகில் கலக்கினார் . 1980-களின் தொடக்கத்தில் அவர் நடித்த இந்திப் படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்ற பெயரும் இவருக்கு கிடைத்தது.
போனி கபூருடன் திருமணம்
கமல், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் என திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்துள்ள ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். பிரபல இந்தித் திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூர் -ஸ்ரீ தேவி தம்பதியருக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமாக சென்னை உள்ளிட்ட இடங்களில் சொத்துக்கள் உள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications