Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுஹாசினி "சனாதனி".. ஹிந்தி நல்ல மொழியா.. அப்ப உருது?.. "முதல்ல நீங்க வெளியேறுங்க".. கொந்தளித்த அமீர்

சுஹாசினி பேசிய பேச்சுக்கு கண்டனங்கள் வெடித்து வருகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜா, கங்கை அமரன் விவகாரத்தை தொடர்ந்து, நடிகை சுஹாசினி பேசிய பேச்சு சர்ச்சையாகி வருகிறது.. இதற்கு எதிர்ப்புகளும் வெடித்து வருகின்றன.

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை சுஹாசினி, செய்தியாளர்களிடம் பேசியதாவது: "நாங்கள் எல்லாம் எல்லா மொழிகளையும் தெரிந்தே ஆக வேண்டும்.

எல்லா மொழிகளையும் மதித்தே ஆக வேண்டும். எங்க வீட்ல காலையில் சமைக்கிற பெண் தெலுங்குதான் பேசுவார்கள்.

 தேசிய மொழி

தேசிய மொழி

இரவு சமைப்பவர் இந்திதான் பேசுவார்கள். எனக்கு இந்த மொழிதான் பிடிக்கும் அந்த மொழிதான் பிடிக்கும்னா சாப்பாடு கிடைக்குமா? எல்லா மொழியையும் தெரிந்துகொள்ள வேண்டும். எல்லாரும் எல்லா மொழியையும் சமமாக நினைக்க வேண்டும்" என்றார்.. அதற்கு செய்தியாளர், "இந்தி தேசிய மொழி என்று சொல்லப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன" என்று மற்றொரு கேள்வி கேட்டனர்.

சுஹாசினி

சுஹாசினி

அதற்கு நடிகை சுஹாசினி, "இந்தி ஒரு நல்ல மொழி கற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம். இந்தி பேசுகிறவர்கள் நல்லவர்கள். அதனால், அவர்களுடன் பேச வேண்டும் என்றால் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். அதே போல தமிழர்களும் நல்லவர்கள். அவர்களிடம் தமிழில் பேசினால் அவர்கள் இன்னும் சந்தோஷமாகி விடுவார்கள். என்னிடம் இந்த கேள்வியைக் கேட்டால் எனக்கு பதிலே சொல்லத் தெரியவில்லை. ஏனென்றால், எனக்கு எவ்வளவு மொழிகள் தெரிகிறதோ அவ்வளவு சந்தோஷம். பிரெஞ்சு மொழி கூட எனக்கு ரொம்ப புடிக்கும். பிரெஞ்சு மொழியும் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை. அதற்காக நான் தமிழ் இல்லை என்று ஆகிவிடுமா? அது மாதிரிதான்" என்றார்.

Recommended Video

    Suhasini Speech | இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் அதனால் கற்றுக்கொள்ளலாம் | Oneindia Tamil
     உருது மொழி

    உருது மொழி

    அதாவது இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், அதனால், அவர்களிடம் பேச இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று சுஹாசினி சொன்னதுதான் தற்போது விமர்சனமாக எழுந்துள்ளது.. அப்படியென்றால் இந்தி பேசாத தமிழர்கள் கெட்டவர்களா? மற்ற மொழி பேசுபவர்கள் கெட்டவர்களா? என்று சுகாசினியிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. இந்தியை சொல்வது போலவே உருது மொழி கற்றவர்கள் நல்லவர்கள், உருது மொழியும் கற்க வேண்டும் என்று சொல்வீர்களா? என்று கேட்கிறார்கள்..

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    தலித் அரசியல் தொடர்பாக தொடர்ந்து முகநூலில் எழுதி வரும் ஸ்டாலின் தி, "நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா மொழிகளிலும் உள்ளார்கள். இதில் இந்த மொழி பேசுபவர்கள் உயர்ந்தவர்கள் அந்த மொழி பேசுபவர்கள்தான் நல்லவர்கள் என்பது பாசிசத்திற்கான ஒரு வழி. சுகாசினி போன்ற இந்து சனாதனிகளிடம் அது வெளிப்படத்தான் செய்யும்" என்று சுஹாசினியின் கருத்தை விமர்சித்துள்ளார்.

     அமீர் காட்டம்

    அமீர் காட்டம்

    அதேபோல டைரக்டர் அமீர் காட்டமாகவே செய்தியாளர்களிடம் பதில் தந்துள்ளார்.. "அப்படி என்றால் தமிழ் பேசுபவர்கள் கெட்டவர்களா? தமிழ் , மலையாளம் , கன்னடம் பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்களா என்பதை சுகாசினி விளக்கவேண்டும். இந்த மண்ணில் ஆழமாக ஆரியம் வேரூன்றி வருகிறது.. அது மிகவும் ஆபத்தானது, அதுதான் இதுபோன்ற புதிய புதிய கருத்துக்களை கொண்டு வருகிறது. மருத்துவ கல்லூரி ஒன்றில் கூட சமஸ்கிருதம் உறுதிமொழி எடுத்துள்ளனர். இந்த சமஸ்கிருதத்தை எல்லாம் உடைத்து ஒழித்துதான் நாம் தமிழை முன்னிலைப்படுத்தி வந்திருக்கிறோம்.

     ஹிந்தி திணிப்பு

    ஹிந்தி திணிப்பு

    ஆனால் மறுபடியும் இவர்கள் பழைய முறையைக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அதனால்தான் ஹிந்தி மொழி நல்ல மொழி, ஹிந்தி மொழி பேசாதவர்கள் நாட்டில் இருக்கக் கூடாது போன்ற வார்த்தைகள் வருகிறது. என் நாட்டில் இருந்து கொண்டு எங்களையே வெளியேற சொல்கிறீர்கள்.. முதலில் நீங்கள் வெளியேறுங்கள், இந்தி திணிப்பை செய்யும் நீங்கள் என் தேசத்தில் இருந்து வெளியேறுங்கள் என்று நான் சொல்கிறேன்" என்றார். ஹிந்தியை இணைப்பு மொழியாக அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது அமித்ஷா சொன்னதில் இருந்தே, இந்த விவகாரம் தலைதூக்கி வருகிறது..

     பா. ரஞ்சித்

    பா. ரஞ்சித்

    அது தற்போது சினிமா துறையிலும் சர்ச்சையாகி வருகிறது.. சமீபத்தில்கூட டைரக்டர் பா.ரஞ்சித் பேசும்போது, "நாம் இந்தி மொழியை ஒருபோதும் தேசிய மொழியாக ஏற்கப்போவதில்லை... எனக்கான இணைப்பு மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி இருப்பது தவறில்லை.. இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் அவசியம் என்று நான் கருதுகிறேன். திராவிடர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிற்பது முக்கியமானது என்றும் நான் நினைக்கிறேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+