ஒரே டைரக்டர்ஸ்.. ஒரே ஹீரோயின்ஸ்.. அதே மாதிரி அரசியலிலும் ரஜினி கமல் சேர வேண்டும்.. சுஹாசினிக்கு ஆசை!
ரஜினி - கமல் அரசியலில் இணைய வேண்டும் என்று சுஹாசினி கூறியுள்ளார்
Recommended Video
சென்னை: "ஒரே மியூசிக் டைரக்டர்ஸ், ஒரே ஹீரோயின்ஸ்கூட கமலும், ரஜினியும் வொர்க் பண்ணிது எல்லாம் நாங்க பார்த்திருக்கோம்.. இப்போ அரசியலிலும் ஒன்று சேர்ந்தால் எங்களுக்கு சந்தோஷமாக இருக்கும்" என்று நடிகை சுஹாசினி தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு நடிகை சுஹாசினி ஒரு டிவி நிகழ்ச்சி பேட்டியில் சொல்லி இருந்ததாவது: கமல், ரஜினி 2 பேரும் இணைந்தால் நன்றாக இருக்கும் என்பது பர்சனலான என்னுடைய ஆசை. இது நிறைவேறுமா எனத் தெரியவில்லை.
ஷாருக்கானும், அமிர்கானும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பதில்லை. அதற்காக, அவர்கள் இருவரும் இரு துருவங்கள் என்று சொல்லிவிட முடியுமா? ரொம்ப சிம்பிள்... அது கமர்ஷியல் லாஜிக்... 2 பலத்தை ஒரே இடத்தில் போடுவதைவிட, 2 பக்கமாக இருந்தால் இன்னும் பலம் அதிகமாகும் என்பதற்காக எடுத்த முடிவு.

ரஜினி
அதேசமயம், 2 பேரும் ஒரே படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்தால், இருவரும் நடிக்கக்கூட வாய்ப்பு உள்ளது... அதை பாலசந்தர், பாரதிராஜா செய்தார்கள். "இணைந்து நடிக்க வேண்டாம்" என்பது தொழில் ரீதியாக அவர்கள் அப்போது எடுத்த முடிவு... அற்புதம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ரஜினியே சொன்னாரே.. அதனால் 2 பேரும் மனது வைத்தால் நிச்சயம் நடக்கும். சித்தாந்தங்கள் வேறு வேறாக இருந்தாலும், மனது வைத்தால் ஒன்றாகச் செயல்பட முடியும்" என்று பெரிய விளக்கத்தை தந்திருந்தார்.

விவாத பொருள்
சுஹாசினி இப்படி பேசியபோதே இது மிகப்பெரிய விவாத பொருளை கிளப்பியது.. இப்போது மீண்டும் சுஹாசினி இதே கருத்தை தெரிவித்துள்ளார். "நாம்" தன்னார்வு நிறுவனத்தின் கீழ் ஓவிய புகைப்பட காலண்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

ஒரே பாதை
பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுஹாசினியிடம் ரஜினி, கமல் அரசியல் பாதை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "இருவரும் ஒரே பாதையில் சென்றால் மகிழ்ச்சியடைவேன்.. எனக்கு ஆசை.. ஒரே ஆசான் கே.பாலசந்தர்கிட்ட வேலை செய்ததையும் நாங்கள் பார்த்திருக்கோம்.. ஒரே மியூசிக் டைரக்டர்ஸ், ஒரே ஹீரோயின்ஸ்கூட வொர்க் பண்ணிது எல்லாம் நாங்க பார்த்திருக்கோம்.. இப்போ அரசியலிலும் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும்" என்று தன் கருத்தை எடுத்து வைத்தார்.

பிறந்த நாள்
ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நெருங்கிய நண்பர்கள்... சென்னையில் நடந்த கமல் விழாவில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இந்த விஷயத்தை பகிரங்கமாகவே மேடையில் எடுத்து வைக்க.. கமல் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அரசியலில் இணைந்து செயல்படுவோம் என்று ரஜினியும், கமலும் அறிவித்தனர். அதற்கு பிறகு இதுகுறித்தும், இது சம்பந்தமாகவும் எந்த தகவலும் அறிவிப்பும் இரு தரப்பில் இருந்துமே வரவில்லை.. இந்த நிலையில் சுகாஹனி கூறியுள்ளது எந்த அளவுக்கு சாத்தியம் என தெரியவில்லை.. ஆனால் இரு தரப்பு ரகிர்களும் இதனை வரவேற்கவே செய்கின்றனர்!

ஆளை காணோமே?
ரசிகர்கள் வரவேற்பது இருக்கட்டும்.. மக்கள் தொடர்பான எந்தப் பிரச்சினைக்கும் ரஜினி வாயே திறப்பதில்லை. திறந்தாலும் தப்பு தப்பாக மட்டுமே பேசுகிறார்... மறுபக்கம் கமல்ஹாசன் இப்போதெல்லாம் அரசியல் செய்வதே இல்லை. அரசியல் பக்கமும் ஆளைக் காணோம்.. இப்படிப்பட்டவர்கள் தனியாக செயல்பட்டாலும் ஆபத்து.. சேர்ந்து செயல்பட்டால் என்னாகுமோ.. அதை விட முக்கியம்.. மக்கள் இவர்கள் இணைவதை விரும்புவார்களா என்பதுதான்!!












Click it and Unblock the Notifications