நடிகை சுகன்யாவின் மகளை பார்த்து இருக்கிறீர்களா? அச்சு அசலாக அம்மாவைப் போலவே இருக்கிறாரே!
சென்னை: நடிகை சுகன்யா தன்னுடைய மகளை சினிமாவில் அறிமுகப்படுத்தாமல் இருக்கும் நிலையில் அவருடைய புகைப்படம் இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சுகன்யா தன்னுடைய மகளை எந்த சினிமா நிகழ்ச்சிகளுக்கும் வெளியில் அழைத்து வராத நிலையில் இப்போது தன்னுடைய மகளோடு எடுத்த புகைப்படம் இணையத்தில் பலரையும் ஆச்சரியமடைய வைத்திருக்கிறது.
காரணம் நடிகை சுகன்யாவை போலவே அச்சு அசலாக அவருடைய மகள் இருக்கிறார் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

அந்த வகையில் வெள்ளி திரையில் சுகன்யா என்ற பெயர் 90ஸ் கிட்ஸ்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அந்த நேரத்தில் முன்னணி நடிகர்கள் பலரோடும் சினிமாவில் நடித்து பிரபலமடைந்திருந்து சுகன்யா சீரியல்களையும் விட்டு வைக்கவில்லை. சின்ன திறையில் ஆனந்தம் சீரியல் சுகன்யாவிற்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது.
வெள்ளி திரையில் சத்யராஜ், பிரபு, கமல்ஹாசன் என்று முக்கியமான பல நடிகர்களோடு ஜோடியாக சுகன்யா நடித்திருந்தார். இவருடைய ஹோம்லியான கெட்டப் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. மார்டன் உடைகளிலும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய சொந்த பெயர் ஆர்த்தி தேவி தானாம். பாரதிராஜாவால் தான் புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் இருந்து சுகன்யா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
பாரதிராஜா தன்னுடைய இயக்கத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு புது பெயரை வைத்து பிரபலமாக்கி விடுவது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அந்த மாதிரி தான் ஆர்த்தி தேவி சுகன்யாவாக இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சில வருடங்களாக சினிமா மற்றும் சீரியலில் தலை காட்டாமல் இருந்த சுகன்யா மீண்டும் சீரியலில் நடிக்க போகிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதோடு சீரியலுக்கான சூட்டிங் எல்லாம் சுகன்யா கலந்து கொண்டிருக்கிறாராம். அது முன்னணி சேனல்களான சன் டிவி, விஜய் டிவி ஜீ தமிழ் போன்ற சீரியல்களில் சுகன்யா நடிக்கும் சீரியல் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் அவருடைய புது சீரியல் பொதிகையில் வெளியாக இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் நடிகை சுகன்யா அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை 2002 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.
பின்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். அந்த நிலையில் சுகன்யா பற்றி சில நேரங்களில் சில வதந்திகள் அடிக்கடி பரவி வருவது வாடிக்கையாக இருக்கிறது. இதனாலையே தன்னுடைய மகளை சினிமா வாழ்க்கைக்கு கொண்டு வந்து விடக்கூடாது என்று உறுதியோடு சுகன்யா இருக்கிறாராம்.
அதுபோல எந்த இசை நிகழ்ச்சிகளுக்கோ, முக்கியமான பங்க்ஷனுக்கு தன்னுடைய மகளை சுகன்யா அதிகமாக கூட்டிக்கொண்டு வருவது கிடையாதாம் இந்த நிலையில் சுகன்யா தன்னுடைய மகள் மற்றும் தன்னுடைய குடும்பத்தோடு எடுத்த புகைப்படம் சிலது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதை பார்த்ததும் அதிகமான ரசிகர்கள் இதுதான் சுகன்யாவின் மகளா என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications