Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல நடிகை கதறல்.. "ப்ளீஸ்.. காப்பாத்துங்க.. அருவருப்பான விஷயம் நடக்குது".. பகீர் குற்றச்சாட்டு

பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா பரபரப்பு புகார் போஸ்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகை, தன்னை காப்பாற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.. தன்னையே குறிவைத்து தாக்குகிறார்கள் என்றும், தயவுசெய்து உதவுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது பாலிவுட்டில் பரபரப்பை கூட்டி வருகிறது.

சமீபகாலமாக சில நடிகைகள், எதை பற்றியும் கவலைப்படாமல், துணிந்து பொதுவெளியில் கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.. அப்படி பேசி, பலரது ஆதரவையும் சமீபத்தில் பெற்றவர் நடிகை சாய் பல்லவி..

பாஜகவை விமர்சித்து, இஸ்லாமியர்களுக்கான ஆதரவுக் கரத்தை நீட்டியதால், பரபரப்பாகவும் இவர் பேசப்பட்டார்.. அந்த வகையில் இன்னொரு நடிகையும் துணிச்சலுக்கு பெயர் போனவர்.. அவர் பெயர் ஸ்வரா பாஸ்கர்..

தாலிபான்கள்

தாலிபான்கள்

இந்துத்துவாவை கடுமையாக எதிர்ப்பவர்.. அதுகுறித்து ட்வீட்களை பதிவிட்டு, பாஜகவினரின் எதிர்ப்புகளை சம்பாதித்தவர்.. சமீபத்தில், இவர் தலிபான் தீவிரவாதிகளுடன், இந்துத்துவாவை ஒப்பிட்டு ஒரு பேட்டி தந்திருந்தார்.. "தீவிரவாதிகளின் அட்டகாசம் ஆப்கானிஸ்தானில் பொறுத்துக்கொள்ள முடியாத அளவில் இருப்பதுபோலத்தான், இங்கேயும் இந்தியாவில் இந்துத்துவ தீவிரவாதமும் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது" என்று கூறியிருந்தார்.

 ஹிந்தியில் மிரட்டல்

ஹிந்தியில் மிரட்டல்

இதையடுத்து இவருக்கு கொலை மிரட்டல் வந்தது.. ஹிந்தியில் எழுதி ஒரு லெட்டரையும் அனுப்பியிருந்தார்கள்.. அந்த கடிதத்தில், "வீர் சாவர்க்கரை இழிவுபடுத்துவதை நாட்டில் இளைஞர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.. இதற்கு பிறகு, போலீசுக்கு பாதுகாப்பு கேட்டு ஓடினார் ஸ்வரா பாஸ்கர்.. இதுபோல இன்னொரு நடிகை, தனுஸ்ரீ தத்தா ஆவார்..

 தீராத விளையாட்டு பிள்ளை

தீராத விளையாட்டு பிள்ளை

தமிழில் விஷால் நடித்த, தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் இவர் நடித்திருந்தார்.. 2009-ல் நானே படேகர் படத்தில் நடித்து கொண்டிருந்தபோது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அப்போது குற்றஞ்சாட்டியிருந்தார்.. ஆனால், போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டு விட்டது.. இப்போது மீண்டும் சில புதிய குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருக்கிறார்.

சான்ஸ்கள்

சான்ஸ்கள்

இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "நான் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் அழுத்தத்தில் இருக்கிறேன். அதற்காக நான் தற்கொலை செய்து கொள்ளமாட்டேன்... நான் குறிவைத்து மிகவும் மோசமாக துன்புறுத்தப்படுகிறேன். தயவுசெய்து யாராவது உதவி செய்யுங்கள். கடந்த வருடம் எனக்கு கிடைக்க இருந்த பட வாய்ப்பு பறிக்கப்பட்டது... அதன் பிறகு என்னுடைய வேலைக்காரி, நான் குடிக்கும் தண்ணீரில் ஏதோ ரசாயானத்தை கலந்ததால், உடல்நிலை பாதிப்பானது.

 மாஃபியாக்கள்

மாஃபியாக்கள்

என்னுடைய கால் 2 முறை, ரிப்பேரை செய்து விபத்தை ஏற்படுத்தினர்.. அதிலிருந்து தப்பித்து மும்பை வந்தேன்... இப்போது எனது வீட்டிற்கு வெளியில் அருவருப்பான சம்பவங்கள் நடக்கின்றன.. இதுக்காக எங்கேயும் போகவும் மாட்டேன். இங்கேயே இருந்து என்னுடைய நடிப்பில் கவனம் செலுத்துவேன்... பாலிவுட் மாஃபியாக்களும், அரசியல்வாதிகளும், சமூக விரோத கிரிமினல்களும் சேர்ந்து கொண்டு என்னை துன்புறுத்துகின்றனர்.. இவை அனைத்திற்கும் மீ டூ வில் நான் குற்றம்சாட்டியவர்கள்தான் காரணம் ஆகும்.. நான் அம்பலப்படுத்திய மீடு குற்றவாளிகளும், என்ஜிஓக்களும்தான் இதற்கு பின்னால் இருக்கிறாக்ள என்று நம்புகிறேன்..

 கை மீறி போயிடுச்சு

கை மீறி போயிடுச்சு

அநீதிக்கு எதிரான நின்றதற்காக துன்புறுத்தப்படுவது இது எந்த மாதிரியான இடம்? மகாராஷ்டிராவில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரவேண்டும்.. இங்கே அனைத்து விஷயங்களும் கையைவிட்டு போகின்றன. இதனால் என்னைப்போன்றவர்கள் கஷ்டப்படுகிறார்கள்... இன்று எனக்கு நடப்பது நாளை உங்களுக்கு நடக்கலாம்.. இனி இந்த ஊரில் சட்டம் ஒழுங்குக்கு இடமிருக்காது. இவற்றை எல்லாம் மீறித்தான் என்னுடைய ஆன்மீக வழியை நாடி செல்கிறேன்.. சகோதரர்களே எனக்கு உதவுங்கள்" என்று அதில் பதிவிட்டுள்ளார்..

 மாஃபியா

மாஃபியா

பாலிவுட் நடிகைகள் பலரும், இப்படி தொடர் குற்றச்சாட்டுகளை அடுத்துடுத்து முன்வைத்து வருகின்றனர்.. இவர்களின் திரை வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர மாபியா கும்பல்கள் ஈடுபட்டு சதி வேலைகளை செய்து வருவதாகவும் புகார் சொல்லிவருகிறார்கள்.. இப்படித்தான் சமீபத்தில் நீத்து சந்திரா இப்படி குற்றச்சாட்டை முன்வைத்தார்.. அடுத்து தனுஸ்ரீ தத்தா குற்றஞ்சாட்டி உள்ளது, பரபரப்பை பாலிவுட்டில் ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+