அவதூறு கருத்து! அதிமுக முன்னாள் நிர்வாகி சேலம் ஏ.வி.ராஜூ மன்னிப்பு கேட்க நடிகை த்ரிஷா நோட்டீஸ்
சென்னை: தன்னை பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜூ. இவர் அண்மையில்தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியின் போது நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதற்கு பலர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். திரைத்துறையை சேர்ந்த இயக்குநர் சேரன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் ஏ.வி.ராஜூவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
நடிகை த்ரிஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. அவர் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். எனது சட்ட வல்லுநர்கள் செய்ய வேண்டியதை செய்வர்.
பொதுவெளியில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மான நஷ்ட வழக்கு தொடருவேன் என எச்சரித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஏ.வி. ராஜூ ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் தான் எந்த நடிகையையும் தவறாக பேசவில்லை, தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது. ஒரு வேளை நான் பேசியது யார் மனதையாவது கஷ்டப்படுத்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ராஜூ தெரிவித்திருந்தார்.
— Trish (@trishtrashers) February 22, 2024
இந்த நிலையில் நடிகை த்ரிஷா, ஏ.வி.ராஜுவுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னை பற்றி சேலம் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ அவதூறாக பேசியதால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.
இந்த நோட்டீஸை பெற்ற 24 மணி நேரத்திற்குள் என்னிடம் ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ், ஆங்கில செய்தித்தாள்களில் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும். தொலைகாட்சிகள், யூடியூப் சேனல்களிலும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடருவேன். சமூகவலைதளங்கள் உள்ளிட்டவைகளில் என்னை பற்றி பேசிய கருத்துகள் அடங்கிய அனைத்து பதிவுகளையும் ஏ.வி.ராஜு அவருடைய சொந்த செலவில் நீக்க வேண்டும். இவ்வாறு த்ரிஷா தனது வக்கீல் நோட்டீஸில் தெரிவித்துள்ளார். ஏ.வி. ராஜு என்ன பேசினார் என்பதற்கான பதிவுகளையும் த்ரிஷா இணைத்து அனுப்பியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications