"விஜய் சார்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்.. எனக்கும் அரசியல் ஆசை”: பரபரப்பை கிளப்பிய நடிகை வாணி போஜன்
சென்னை: நடிகர் விஜய்க்கு அரசியலில் மக்கள் ஒருமுறை வாய்ப்பு கொடுக்க வேண்டும். எனக்கும் அரசியல் ஆசை இருக்கிறது எனக் கூறியுள்ளார் நடிகை வாணி போஜன்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் தனது கட்சியை தொடங்கி, அரசியல் பாதையில் நடைபோடத் தொடங்கியுள்ளார் விஜய். வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், 2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு என்றும் அறிவித்துள்ளார் விஜய்.

தற்போது கமிட் ஆகியிருக்கும் படங்களை முடித்துவிட்டு, முழு நேர அரசியலுக்கு வர இருப்பதாகவும் விஜய் தெரிவித்துள்ளார். அதன் பிறகு படங்களில் நடிக்க மாட்டேன் என்றும், முழுமையாக மக்கள் சேவையாற்றப் போவதாகவும் அறிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்பு, அவரது ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.
விஜய்யின் அரசியல் பயணம் குறித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை வாணி போஜன் விஜய்யின் அரசியல் பயணம் பற்றிப் பேசியுள்ளார். இன்று நடைபெற்ற நகைக் கடை திறப்பு விழா ஒன்றில் நடிகை வாணி போஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் அரசியல் ஆசை இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு வாணி போஜன், "ஒரு பிரபல அரசியல் தலைவரின் வாழ்க்கையை நாங்கள் 'செங்களம்' என்ற பெயரில் வெப் சீரிஸாக எடுத்தோம். அதில் நான் நடித்த போது எனக்கு அரசியல் ஆசை இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. ஆனால், விரைவில் அரசியலுக்கு வருவேனா என்பது குறித்து தெரியவில்லை" என்றார்.
விஜய், அரசியலுக்கு வருவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த வாணி போஜன், "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். என்னைக் கேட்டால் நடிகர் விஜய்க்கு அரசியலில் மக்கள் ஒருமுறை வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் மக்களுக்காக என்ன செய்கிறார், அவருடைய நோக்கம் என்ன என்பது பற்றி நமக்கும் தெரிய வரும்" என்றார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகை வாணி போஜன் தன்னுடைய அரசியல் ஆசையை வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விஜய்க்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கூறி இருப்பதால், விஜய்யின் கட்சியில் வாணி போஜன் இணையப் போகிறாரா என்றும் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
தொலைக்காட்சியில் சின்னத்திரை தொடர்கள் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வாணி போஜன். நீலகிரி மாவட்டம் ஊட்டியை ச்ந்த ஊராகக் கொண்ட வாணி போஜன், விமான சேவை நிறுவனத்தில் பணிப்பெண்ணாகப் பணியாற்றியவர். பின்னர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார். தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.
அண்மையில், வாணி போஜன் நடிப்பில் 'செங்களம்' என்ற வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில், சூர்யகலா என்ற கேரக்டரில் அரசியல்வாதியாக நடித்திருந்தார் வாணி போஜன். அதில், அவரது கட்சியின் பெயர் 'நமது கழகம்' என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications