நடிகை வனிதா கர்ப்பமா.. தீயாய் பரவும் மேட்டர்.. அவரே போட்டோ போட்டுட்டாரே.. திரண்டு வந்த நெட்டிசன்கள்

: நடிகை வனிதாவின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை வனிதா கர்ப்பமாக இருக்கிறாரா? என்று நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

வனிதா என்றாலே வைரல் என்று ஆகிவிட்டது.. வனிதா எது பேசினாலும் சர்ச்சை.. எது செய்தாலும் சர்ச்சை என்ற பிம்பமும் படிந்துவிட்டது.

இதற்கு காரணம் இவரது தனிப்பட்ட வாழ்க்கையும், அவரது இயல்பான குணமும்தான்.. கடந்த 2012ம் ஆண்டு முதல், கணவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்ட நிலையில், 2 மகள்களுடன் தனியே வசித்து வந்தார் வனிதா.

 பீட்டர்பால்

பீட்டர்பால்

அப்போது முதலே இவருக்கு எந்தவித ஆதரவும் இல்லாமல், தனித்தே அதே சமயம் 2 பெண் குழந்தைகளையும் கவனமாகவும், பாசமாகவும் வளர்க்க தொடங்கினார். பின்னர், 2020ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார் வனிதா... ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக, இருவரும் அதே வேகத்தில் பிரிந்துவிட்டனர்... திரைப்படங்கள் எதுவுமே கைகொடுக்காத நிலையில், வனிதாவுக்கு ஒரே ஆதரவாக இருப்பது டிவிக்கள் மட்டும்தான்.

 வனிதா டிஆர்பி ரேட்

வனிதா டிஆர்பி ரேட்

டிஆர்பி எகிற வேண்டுமானால், கூப்பிடுங்கள் வனிதாவை என்று சொல்லுமளவுக்கு, தனக்கான இடத்தை பிடித்துள்ளார் வனிதா.. இப்போது ஒரு சினிமாவில் நடித்து வருகிறார்.. கடந்த 1995ம் ஆண்டு சந்திரலேகா என்ற படத்தில் விஜய் ஜோடியாக வனிதா நடித்தார்... பிறகு, மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன் போன்ற தமிழ் படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.

 யூடியூப் சேனல்

யூடியூப் சேனல்

அதற்கு பிறகு சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் காரணமாகவே சினிமாவில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை.. அதனால்தான் டிவி பக்கம் ஒதுங்கினார்.. இந்த டிவி ஷோக்கள், வனிதாவின் வாழ்க்கை தரத்தையே உயர்த்திவிட்டது எனலாம்.. நிறைய நிகழ்ச்சிகள், சீரியல்களில் கமிட் ஆகி உள்ளார்.. தனியாக ஒரு யூடியூப் சேனல் நடத்துகிறார்.. துணி கடை, மேக் அப் ஆர்ட்டிஸ்ட் என்று முன்னேறி வருகிறார்.

 கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள்

இப்போது ஒரு போட்டோ வைரலாகி வருகிறது.. தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ, எஸ்தல் என்டர்டெய்னர் நிறுவனம் சார்பில் 'வாசுவின் கர்ப்பிணிகள்' என்ற படத்தை மணி நாகராஜ் இயக்குகிறார்... 2013ம் ஆண்டு, மலையாளத்தில் இந்த படம் வெளிவந்துள்ளது.. அதன் ரீமேக் இது.. ஒரு டாக்டர் சந்திக்கும் விநோதமான 4 கர்ப்பிணிகள் பற்றிய கதை இது. எதிர்பாராத விதமாக கர்ப்பமாகும் 18 வயது இளம்பெண், கருத்தரிப்பு சிகிச்சை மூலம் கருவுறும் வயதான பெண்மணி என வித்தியாசமாக எடுக்கப்படுகிறது.. டாக்டராக 'நீயா நானா' கோபிநாத், மற்றும் அனிகா, சீதா, வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

 ஷூட்டிங் - வனிதா

ஷூட்டிங் - வனிதா

படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கர்ப்பமாக இருக்கும் வனிதாவின் போட்டோ வெளியாகி உள்ளது.. இந்த போட்டோவை வனிதாவே தன்னுடைய இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அந்த படத்தில் வனிதா கர்ப்பிணியாக நடிக்கிறார் என்பது தெரியாமலேயே, "என்னது, வனிதா கர்ப்பமா?" என்று நெட்டிசன்கள் வியப்பில் ஆழ்ந்துவிட்டனர்.. வனிதா எது பதிவிட்டாலும் எதாவது ஒரு சர்ச்சையாக கிளம்பி விடுவது வழக்கம் என்றாலும், இந்த கர்ப்பிணி போட்டோ வனிதா எதிர்பார்த்தபடியே ரீச் ஆகிவிட்டது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+