பாஜகவில் இணைவது தொடர்பாக நானே அறிவிப்பேன்- நடிகை வனிதா தகவல்
சென்னை: பாஜகவில் இணைவது தொடர்பாக நானே அறிவிப்பேன் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
தந்தையுடன் தகராறு, கணவர் ஆகாஷுடன் மோதல், மகன் ஸ்ரீஹரிக்கு உரிமை கோரி போராட்டம், தாய் மஞ்சுளாவுடன் வாக்குவாதம் என 2000-களில் பிரபலமடைந்தார் வனிதா விஜயகுமார்.
இதையடுத்து ஆனந்த என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டார்.

கோமாளி
அந்த நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்தார். அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட் எகிறியதே வனிதாவால்தான் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் பீட்டர் பால் என்பவரை லாக்டவுனின் போது திருமணம் செய்து கொண்ட வனிதா மீண்டும் லைம்லைட்டுக்குள் வந்தார்.

வனிதா
விவாகரத்து ஆகாத பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்ட வனிதா நடிகை கஸ்தூரி, குட்டி பத்மினி, இயக்குநர் ரவீந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரின் கடும் எதிர்ப்பை சம்பாதித்தார். இந்த நிலையில் ஜூன் மாதம் நிகழ்ந்த திருமணம் கசந்ததால் இருவரும் பிரிந்து விட்டதாக வனிதாவே அறிவித்துவிட்டார்.

குஷ்பு
இந்த நிலையில் அவர் நடிகைகள் நமீதா, காயத்ரி ரகுராம், ஜெயலட்சுமி, குஷ்பு ஆகியோரை போல் நடிகை வனிதாவும் பாஜகவில் இணைவதாக ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது. அவர் இன்றைய தினம் இணைகிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.

கேள்விக்குறி
இதுகுறித்து நடிகை வனிதா விஜயகுமார் கூறுகையில் பாஜகவில் இணைவது தொடர்பாக நானே அறிவிப்பேன். இப்போது அது பற்றி எதுவும் சொல்ல முடியாது என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். இதிலிருந்து அவர் பாஜகவில் இணைவது என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் எப்போது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications