அழகு.. அம்சம்.. அன்பு.. பாசம்.. ஆஹா வரலட்சுமி.. பெருமையுடன் அப்பா!

வரலட்சுமி சரத்குமார் சரவணா ஸ்டோர் விளம்பரத்தை பதிவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் வரலட்சுமி சரத்குமார்- வீடியோ

    சென்னை: அழகுன்னா அவ்வளவு அழகாக இருக்கிறார் அவர்!!

    சரவணா ஸ்டோர் விளம்பரம் புதுசா ஒன்னு வந்திருக்கு. வழக்கம்போல சிங்கம் வந்து இதிலயும் நடித்து கலக்கல் டான்ஸ் இருக்கும் என்று பார்த்தால், அவர் இல்லை.

    விளம்பரத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் வருகிறார். இது சூப்பர் சரவணா ஸ்டோர் கெட்டி மேளம் பட்டு புடவைகளுக்கான விளம்பரம்.

    தந்தை மகள் உறவின் ஆழத்தை விளம்பரம் தெரியப்படுத்துகிறது. மகளின் 3 பருவத்தை 3 வரிகளிலே இந்த விளம்பர பாடல் வருகிறது.

    கொஞ்சி பேசும் தந்தை

    கொஞ்சி பேசும் தந்தை

    "சின்ன கைகள் கண்கள் மூடி செய்தி பல சொல்லும்போது ஆனந்தம்..." என்று விளம்பர பாடல் ஆரம்பிக்கிறது. சிறுமியாக இருக்கும் தன் மகளுடன் கொஞ்சி பேசி மகிழ்கிறார்.

    சித்திரம் வரைகிறார்

    சித்திரம் வரைகிறார்

    "சிலையாய் என்னை நிற்க சொல்லி சித்திரம் நீ வரையும்போது ஆனந்தம்" என்ற அடுத்த வரி தொடங்கும்போது, உண்மையாகவே சரத்குமார் சிலை போல நிற்க அவரை அவரது உருவத்தை பருவ மகள் வரைந்து கொண்டிருக்கிறார்.

    ஸ்வீட் ஷாக்

    ஸ்வீட் ஷாக்

    சரத்குமாரை இப்படி சிலை போல நிற்க வைத்து வரைவது யார் என்று பார்த்தால், பருவ வயது மகள் வரலட்சுமி எட்டி பார்த்து சிரிக்கிறார். இது நமக்கு பெரிய "ஷாக்".

    மணமகள் வரலட்சுமி

    மணமகள் வரலட்சுமி

    "கெட்டி மேளம் கெட்டி மேளம் பெண்ணே உன் கல்யாணம்... கெட்டி மேளம் கெட்டி மேளம் அழகான ஆனந்தம்" என்ற வரிகளின்போது மகள் வரலட்சுமி மணமகளாக மணமேடைக்கு நடந்து வருகிறார். அதை பூரிப்புடன் சரத்குமார் பார்த்து நெகிழ்கிறார்.

    ட்விட்டரில் பதிவு

    45 நொடிகள்தான் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சரத்குமாரும், வரலட்சுமியும் அவ்வளவு அழகாக இருக்கிறார்கள். தன் தந்தையுடன் முதன்முதலாக நடித்தது என்று வரலட்சுமி தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த விளம்பரத்தை பெருமையாக பதிவிட்டுள்ளார். உண்மையிலேயே வரலட்சுமியை கல்யாண கோலத்தில் பார்க்க அழகாக இருக்கிறார் நிஜமாவே வரலட்சுமி கல்யாண கோலத்தில் எப்போது வரப்போகிறார்?

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+