Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீமானை விடுங்க.. எடப்பாடியை விடாத விஜயலட்சுமி.. ரகசியமாக இப்படி ஒரு அட்டாக் பண்ணிட்டாங்களே.. போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கடுமையான புகார்களை வைத்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமி - சீமான் விவகாரம் தமிழ்நாடு அரசியலை மீண்டும் பூதாகரமாக்கி உள்ளது. சீமான் என்னை ஏமாற்றிவிட்டார்.. சீமான் என்னை திருமணம் செய்வதாக கூறினார்.. என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்றெல்லாம் விஜயலட்சுமி கூறி வருகிறார்.

 Actress Vijayalakshmi accuses Edappadi Palanisamy too in her complaint against Naam Tamilar Seeman

எதிர் பக்கம் சீமானோ.. இது பொய்யான புகார். அரசியல் ரீதியாக தனக்கு எதிராக வைக்கப்படும் புகார் என்று கூறுகிறார். முக்கியமாக விஜயலட்சுமி சீமானிடம் பணம் பறிக்க பார்க்கிறார். அவரிடம் பணம் கேட்க வேண்டும் என்று இப்படி மிரட்டுகிறார் என்று நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

விஜயலட்சுமி வைக்கும் புகார்கள்: விஜயலட்சுமி வைக்கும் புகார்கள் பின்வருமாறு.. நீண்ட காலமாக சீமான் என்னை காதலிப்பதாக கூறினார். நாங்கள் நெருக்கமாக இருந்தோம். ஒன்றாக வாழ்ந்து வந்தோம். அதன்பின் அரசியல் ரீதியாக தேவைக்காக பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

என்னை ஏமாற்றிவிட்டார். அவர் என்னை பாலியல் ரீதியாக தேவைகளுக்கு பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டார். அவர் என்னை திருமணம் செய்வதாக கூறினார். இப்போது ஏமாற்றியதும் இல்லாமல் என்னை மிரட்டி வருகிறார்.

முக்கியமாக அரசியல் ரீதியாக நான் தமிழ்நாடு வரக்கூடாது என்று மிரட்டி வருகிறார். நான் தமிழ்நாடு வந்தால் நாம் தமிழர் கட்சியினர் என்னை தாக்குவார்கள் என்று சீமான் மிரட்டுவதாக விஜயலட்சுமி கூறி வருகிறார். இதற்கான வீடியோ ஆதாரங்களையும் அவர் வெளியிட்டு உள்ளார்.

சீமான் தரப்பு: இன்னொரு பக்கம் நாம் தமிழர் தரப்போ, விஜயலட்சுமி மாற்றி மாற்றி பேசி வருகிறார். அவர் பொய் சொல்கிறார். விஜயலட்சுமி பணம் பறிக்க முயன்ற ஆடியோக்கள் உள்ளன. அவை இணையத்திலேயே இருக்கின்றன என்று நாம் தமிழர் தரப்பினர் புகார் வைக்கின்றனர்.

அதிமுக: இந்த நிலையில்தான் சீமான் மட்டுமின்றி தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய ஆட்சி மீதும் விஜயலட்சுமி புகார் வைத்துள்ளார். அதில், அதில், நான் சீமானுக்கு எதிராக இன்று புகார் கொடுக்க உள்ளேன். உங்களுக்கே தெரியும் அதிமுக ஆட்சியில் அவருக்கு எதிராக நான் புகார் கொடுக்க முடியவில்லை. பெண்களை பாதுகாக்கும் கட்சி என்று கூறிய அதிமுக கட்சியின் எடப்பாடி ஆட்சியில் எனக்கு மிரட்டல் விடுத்தனர்.

என்னை துடிக்க துடிக்க தொல்லை செய்தனர். என்னை தடுத்தனர். மிரட்டினர். எனக்கு எதிராக அதிமுக அரசு உதவியுடன் நாம் தமிழர் கட்சியினர் செயல்பட்டனர். மக்கள் எல்லோருக்குமே தெரியும். அதிமுக காலத்தில் சீமான் மீது வழக்கு தொடுத்தாலும் அதிமுகவினர் சீமானை காப்பாற்றினார்கள்.

அவரை காப்பாற்றுவதற்காக என்னை துடிக்க துடிக்க வைத்தனர். எவ்வளவு புகார்களை, மிரட்டல்களை எல்லாம் தாண்டி இன்று மீண்டும் புகார் கொடுக்க உள்ளேன். எனக்கு நீதி கிடைப்பது என்பது மக்களுக்கு நீதி கிடைப்பது மாதிரி. எனக்கு ஆதரவாக இந்த ஆளும் அரசு.. ஒரு பெண்னுக்கு ஆதரவாக ஆளும் அரசு இருக்கும் என்று நம்புகிறேன். மக்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

பெண்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அரசு எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இன்று காலை 11 மணிக்கு நான் போலீஸ் அலுவலகம் சென்று புகார் கொடுக்க போகிறேன். நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். சீமான் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+