நடக்குறதை பார்த்தா! விஜயலட்சுமி கேஸில் முறையாக காய் நகர்த்திய போலீஸ்! சீமானுக்கு செக்! அடுத்து அதுவா
சென்னை: நடிகை விஜயலட்சுமி முன்பே மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் கொடுத்த நிலையில் தற்போது போலீசார் எடுக்கும் நடவடிக்கைகள் சீமானுக்கு எதிராக திரும்புகிறதோ என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை விஜயலட்சுமி - சீமான் விவகாரம் தமிழ்நாடு அரசியலை மீண்டும் பூதாகரமாக்கி உள்ளது. சீமான் என்னை ஏமாற்றிவிட்டார்.. சீமான் என்னை திருமணம் செய்வதாக கூறினார்.. என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்றெல்லாம் விஜயலட்சுமி கூறி வருகிறார்.

எதிர் பக்கம் சீமானோ.. இது பொய்யான புகார். அரசியல் ரீதியாக தனக்கு எதிராக வைக்கப்படும் புகார் என்று கூறுகிறார். முக்கியமாக விஜயலட்சுமி சீமானிடம் பணம் பறிக்க பார்க்கிறார். அவரிடம் பணம் கேட்க வேண்டும் என்று இப்படி மிரட்டுகிறார் என்று நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
விஜயலட்சுமி வைக்கும் புகார்கள்: விஜயலட்சுமி வைக்கும் புகார்கள் பின்வருமாறு.. நீண்ட காலமாக சீமான் என்னை காதலிப்பதாக கூறினார். நாங்கள் நெருக்கமாக இருந்தோம். ஒன்றாக வாழ்ந்து வந்தோம். அதன்பின் அரசியல் ரீதியாக தேவைக்காக பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
என்னை ஏமாற்றிவிட்டார். அவர் என்னை பாலியல் ரீதியாக தேவைகளுக்கு பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டார். அவர் என்னை திருமணம் செய்வதாக கூறினார். இப்போது ஏமாற்றியதும் இல்லாமல் என்னை மிரட்டி வருகிறார்.
முக்கியமாக அரசியல் ரீதியாக நான் தமிழ்நாடு வரக்கூடாது என்று மிரட்டி வருகிறார். நான் தமிழ்நாடு வந்தால் நாம் தமிழர் கட்சியினர் என்னை தாக்குவார்கள் என்று சீமான் மிரட்டுவதாக விஜயலட்சுமி கூறி வருகிறார். இதற்கான வீடியோ ஆதாரங்களையும் அவர் வெளியிட்டு உள்ளார்.
சீமான் தரப்பு: இன்னொரு பக்கம் நாம் தமிழர் தரப்போ, விஜயலட்சுமி மாற்றி மாற்றி பேசி வருகிறார். அவர் பொய் சொல்கிறார். விஜயலட்சுமி பணம்தன் பறிக்க முயன்ற ஆடியோக்கள் உள்ளன. அவை இணையத்திலேயே இருக்கின்றன என்று நாம் தமிழர் தரப்பினர் புகார் வைக்கின்றனர்.
வாக்குமூலம் - புகார்: அதன்பின் சமீபத்தில் நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் நாம் தமிழர் சீமானுக்கு எதிராக புகார் கொடுத்தார். அதில் இயக்குனர் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நேரடியாக பாலியல் புகார்களை வைத்துள்ளார். முதலில் சீமான் தன்னை காதலித்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
ஆனால் அதன்பின் என்னை ஏமாற்றிவிட்டார். என்னை பாலியல் ரீதியாக அவர் பயன்படுத்திக்கொண்டார் . திருமணம் செய்வதாக கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். ஆனால் கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று விஜயலட்சுமி கூறினார்.
இது தொடர்பாக விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை செய்தனர். போலீசார் விசாரணையின் போது நடிகை விஜயலட்சுமி நடந்து கொண்ட விதம் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. விஜயலட்சுமி மிகவும் எமோஷனலாக காணப்பட்டு உள்ளார். அடிக்கடி விசாரணையில் அழுதுள்ளார்.சீமானை கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த விசாரணையின் போது காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்ல நடிகை விஜயலட்சுமி மறுத்ததாக கூறப்படுகிறது. சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெளியேற மறுப்பதாக கூறப்படுகிறது.விசாரணையில் சில முக்கிய வீடியோக்களை விஜயலட்சுமி கொடுத்துள்ளார்.
முக்கிய போன் ரெக்கார்டுகள், மெசேஜ்கள், பணம் கொடுத்த வங்கி விவரங்களையும் விஜயலட்சுமி போலீசில் பகிர்ந்து உள்ளார். இதையடுத்து சீமான் மீதான புகாரில் நடிகை விஜயலட்சுமியை மாஜிஸ்திரேட் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இரவு முழுக்க பரபரப்பு: இதையடுத்து விஜயலட்சுமி மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் கொடுத்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் பதற்றத்துடன் காணப்பட்டனர். இதில் சீமான் மீது எப்ஐஆர் போடப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானது.
அதோடு சீமான் கைது செய்யப்படலாம் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் நேற்று அப்படி எதுவும் எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. மாஜிஸ்திரேட் முன் விசாரணை நடந்துள்ள நிலையில் தற்போது அவருக்கு மாஜிஸ்திரேட் முன்னிலையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு 8 முறை கரு உண்டாகி அதை கலைத்ததாக, சீமான் தனக்கு தொந்தரவு, தொல்லை, கொடுமை கொடுத்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
இதை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனை நடந்துள்ளது. இந்த நிலையில்தான் போலீஸ் இதில் முறையாக அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஸ்டெப்புகள் சீமான் மீதான வழக்கை வலுவாக்க பார்க்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் விரைவில் அவர் மீது எப்ஐஆர் பதிய வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. இதனால் எங்கே சீமான் அடுத்து கைதாகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications