சீமானை கைது பண்ணுங்க.. கையெடுத்து கும்பிட்டு.. கதறி அழுத விஜயலட்சுமி.. இப்படி சொல்லிட்டாங்களே!
சென்னை: சீமானை கைது செய்ய வேண்டும், இனியும் காத்திருக்க முடியாது, அவர் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார், அவரை விடக்கூடாது, அவருக்கு எதிராக புதிதாக புகார் கொடுத்துள்ளோம் என்று நடிகை விஜயலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.
இன்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்தார். இந்த புகாருக்கு பின் கண்ணீர் விட்டபடி பேசிய விஜயலட்சுமி.. உங்க வீட்டில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு உதவுங்கள். 2011 கேஸை மீண்டும் விசாரிக்க வேண்டும். இதில் விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சீமான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.

அதனால் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஆகினோம். அதிமுக இதில் விசாரிக்கவே இல்லை. அவர்கள் என்னை மட்டுமே விசாரணை செய்தனர், சீமானை விசாரிக்கவில்லை. ஏன் சீமானை விசாரிக்கவில்லை என்பது எல்லோர்க்கும் தெரியும்.
சீமான் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சமாதானம் செய்தார். அதனால் அவர் கைது செய்யப்படாமல் இருந்தார். அவர் சமாதானம் செய்ததால் அவரை கைது செய்ய விடாமல் அமைதி செய்தோம்.
ஆனால் இப்போது இனியும் காத்திருக்க முடியாது. அவர் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். அவை விடக்கூடாது. சீமானை கைது செய்ய வேண்டும். சீமானை கைது செய்யாமல் இருக்க கூடாது. அவருக்கு எதிராக புதிதாக புகார் கொடுத்துள்ளோம்.
அவர் பேசியதை எல்லாம், அவர் சொன்னதை எல்லாம் போலீசுக்கு கொடுத்துள்ளோம். உங்க வீட்டில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு உதவுங்கள். போலீஸ்தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். நான் சில விஷயங்களை போலீசிடம் சொல்லி இருக்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம், என்று நடிகை விஜயலட்சுமி இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
வீடியோ: புகாருக்கு முன் அவர் வெளியிட்ட வீடியோவில், அதில், நான் சீமானுக்கு எதிராக இன்று புகார் கொடுக்க உள்ளேன். உங்களுக்கே தெரியும் அதிமுக ஆட்சியில் அவருக்கு எதிராக நான் புகார் கொடுக்க முடியவில்லை.
என்னை துடிக்க துடிக்க தொல்லை செய்தனர். என்னை தடுத்தனர். மிரட்டினர். எனக்கு எதிராக அதிமுக அரசு உதவியுடன் நாம் தமிழர் கட்சியினர் செயல்பட்டனர். மக்கள் எல்லோருக்குமே தெரியும். அதிமுக காலத்தில் சீமான் மீது வழக்கு தொடுத்தாலும் அதிமுகவினர் சீமானை காப்பாற்றினார்கள்.
அவரை காப்பாற்றுவதற்காக என்னை துடிக்க துடிக்க வைத்தனர். எவ்வளவு புகார்களை, மிரட்டல்களை எல்லாம் தாண்டி இன்று மீண்டும் புகார் கொடுக்க உள்ளேன். எனக்கு நீதி கிடைப்பது என்பது மக்களுக்கு நீதி கிடைப்பது மாதிரி. எனக்கு ஆதரவாக இந்த ஆளும் அரசு.. ஒரு பெண்னுக்கு ஆதரவாக ஆளும் அரசு இருக்கும் என்று நம்புகிறேன். மக்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
பெண்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அரசு எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இன்று காலை 11 மணிக்கு நான் போலீஸ் அலுவலகம் சென்று புகார் கொடுக்க போகிறேன். நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். சீமான் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications