2 நாளில் நான் சாகபோகிறேன்! இதுதான் என் கடைசி வீடியோ! சீமானுக்கு மீண்டும் குடைச்சல் தரும் விஜயலட்சுமி
சென்னை: இன்னும் இரு நாட்களில் நான் சாக போகிறேன். இதுதான் எனது கடைசி வீடியோ என நடிகை விஜயலட்சுமி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த மாத இறுதியில் மொட்டை மாடியில் நின்றுக் கொண்டு சீமான் மாமா, நான் உங்கள் கள்ளக்காதலி அல்ல, உங்கள் மனைவி, உங்கள் மனதில் நான் இருக்கிறேன். நீங்கள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது என கூறி விஜயலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதில் தான் சாக போகிறேன் என்றும் மீடியாக்கள் இதை சீமானிடம் சேர்த்து விடுங்கள் என்றும் செய்தியாளர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுகுறித்து நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில் பிப்ரவரி 29ஆம் தேதி நான் ஒரு வீடியோவை போட்டிருந்தேன். அதில் ஒரு கோரிக்கையையும் முன் வைத்திருந்தேன். சீமானை என்கிட்ட பேச சொல்லுங்கள் என கேட்டிருந்தேன். இன்று மார்ச் 5 ஆம் தேதி (நேற்றைய வீடியோ) இதுவரை அவர் என்னிடம் பேசவில்லை.
மன அழுத்தத்துடன் மொட்டை மாடிக்கு சென்றேன்: ஒரு பொண்ணு மொட்டை மாடிக்கு சென்று எத்தனை மன அழுத்தம் இருந்திருந்தால் அது போல் ஒரு வீடியோ போட்டிருப்பாள் இல்லையா? அந்த பொண்ணு அப்படி ஒரு வீடியோவை போடும் போது கூட அவள் சாகட்டும் என ஒருத்தர் விடுகிறார் என்றால், தமிழ்நாட்டில் உள்ள மக்கள் எல்லாருக்கும் நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.
குடும்பம் நடத்திய சீமான்: 2008ஆம் ஆண்டு எனது மூத்த சகோதரியின் பிரச்சினைக்காகத்தான் நான் சீமானை சந்தித்தேன். அப்போது என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னுடன் 3 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு வாழ்க்கையை சீரழித்துவிட்டு ரகசியமாக என் கூட திருமணம் செய்து கொண்டு அதைஅவர் வெளியேயும் சொல்லவில்லை.
அவருக்கு ஒரு பிரச்சினை என்பதால் என்னை அப்படியே நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றார். சரி என்னை தமிழகத்தில் வாழ விடாமல் என்னை பற்றி அசிங்கமாக பேசினார், எனக்கு யார் உதவி செய்ய வந்தாலும் அவர்களையும் அசிங்கமாக பேசினார். திமுககாரங்க முன்னாடி என் மானத்தை வாங்க வேண்டாம், அதனால் என்னை பற்றி பேச வேண்டாம், நான் விஜயலட்சுமியை காப்பாற்றுகிறேன்.
மாதம் ரூ 50 ஆயிரம் டீல்: நான்தானே அவருடைய புருஷன். இனி மாதந்தோறும் ரூ 50 ஆயிரம் கொடுப்பதாக மதுரை செல்வத்தை வைத்து டீலிங் பேசினார். இதை எல்லாம் நானும் ஒப்புக் கொண்டேன். ஆனால் இன்று கயல்விழிதான் உயிரு என சீமான் நாடகம் போடுகிறார். தினம் என்னிடம் வீடியோக்களை வாங்கிக் கொண்டு மார்ச் முதல் அக்டோபர் வரை சீமான் செய்த அட்டூழியம் இருக்கே அது சாதாரணம் இல்லை.
அதனால்தான் நான் கதறிக் கொண்டே புகார் கொடுத்தேன். கர்நாடகாவிலும் என்னால் வாழ முடியவில்லை. தமிழகத்திற்கு நான் வெளியிடும் கடைசி வீடியோ இதுதான். இன்னும் இரு நாட்களில் கர்நாடகாவில் உள்ளவர்கள் நான் எப்படி இறந்தேன் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துவார்கள். கர்நாடகாவில் ஒரு நடிகருடன் என்னை சேர்த்து வைத்து பேசி மிகவும் கொச்சைப்படுத்தினார். கர்நாடகா பெண் என்பதற்காக என்னை மிகவும் டார்ச்சர் செய்து அனுப்பினார். இதற்காகவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
தமிழக மக்களுக்கு புரியும்: என்னோட மரணம், சீமான், நாம் தமிழர் கட்சி என்றால் என்ன என்பதை நன்றாக புரிய வைத்துவிடும். இந்த மாதிரி ஒருவர் தமிழகத்திற்கு வேண்டுமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் எல்லாருடைய அன்பிற்கும், ஆதரவுக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications