“பச்சைப்பொய் பேசி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் சீமான்”.. மீண்டும் வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி!
சென்னை: நடிகை விஜயலட்சுமி, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கேள்வி எழுப்பி புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். "நல்லா குடும்பம் நடத்திவிட்டு, என் காலைவாரி விட்டுவிட்டு, கேட்டால் எனக்கு அவங்க யாருன்னே தெரியாது. அவங்களை காங்கிரஸ் அழைத்து வந்துள்ளது எனக்கு எதிராக அரசியல் பண்றதுக்கு என்று ஒரு பச்சைப்பொய்யை சொல்லி தமிழ்நாட்டு மக்களை 14 வருஷமாக ஏமாற்றி வந்தீர்களே... 2023 ஆம் ஆண்டு என்னிடம் ஒரு டீல் பேசுனீங்க. திமுக வந்துருச்சு. நீ எதுவும் பேசிறாத. சென்னை பக்கமே வந்துடாத. நான் மாதம் மாதம் ரூ.50,000 தந்துவிடுகிறேன் என்று டீல் பேசுனது யாரு" எனப் பேசியுள்ளார் விஜயலட்சுமி.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாக நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து அவர் அளித்த மனுவில், சீமான் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். என்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டார். பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார் எனக் கூறி இருந்தார்.

இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வந்தது. இந்தச் சூழலில் நடிகை விஜயலட்சுமி கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கைத் திரும்பப் பெற்றார். ஆனால் காவல்துறை அந்த வழக்கை முழுமையாக முடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மீண்டும் நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2023 ஆம் ஆண்டு சீமான் மீது புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சீமான் ஏமாற்றி விட்டதாகவும், அவர் கட்டாயப்படுத்தி ஏழு முறை கரு கலைப்பு செய்ததாகப் பரபரப்பு குற்றச் சாட்டை முன்வைத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், மீண்டும் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அதன் பிறகு செப்டம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சீமானுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். ஆனால் சீமான் ஆஜராகவில்லை.
இதற்கிடையே நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் சீமானுக்கு எதிரான நடவடிக்கை இடைக்காலத் தடை விதித்தது. மேலும் இந்த விவகாரத்தில் இருவரும் பேசி சுமுகமான முடிவை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து சீமானுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு நடிகை விஜயலட்சுமி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் மன்னிப்பு தெரிவித்து கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதனைச் சீமான் மீறினால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் செப்டம்பர் 24ஆம் தேதி வரை சீமானுக்கு நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.
இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "நல்லா குடும்பம் நடத்திவிட்டு, என் காலைவாரி விட்டுவிட்டு, கேட்டால் எனக்கு அவங்க யாருன்னே தெரியாது. அவங்களை காங்கிரஸ் அழைத்து வந்துள்ளது எனக்கு எதிராக அரசியல் பண்றதுக்கு என்று ஒரு பச்சைப்பொய்யை சொல்லி தமிழ்நாட்டு மக்களை 14 வருஷமாக ஏமாற்றி வந்தீர்களே... அது யாரு ஏமாத்தினது.
2023 ஆம் ஆண்டு என்னிடம் ஒரு டீல் பேசுனீங்க. திமுக வந்துருச்சு. நீ எதுவும் பேசிறாத. சென்னை பக்கமே வந்துடாத. நான் மாதம் மாதம் ரூ.50,000 தந்துவிடுகிறேன் என்று டீல் பேசுனது யாரு. போட்டது யாரு... மதுரை செல்வம் எனக்கு ரூபாய் 2 கோடி கொடுத்ததாக கூறி மிரட்டுகிறார். நீங்கள் செய்த தொந்தரவுக்குத்தான் நான் புகார் கொடுத்தேன். இன்னும் திமுக கூட்டி வந்தது, விஜயலட்சுமி கூட்டி வந்தார் என அபாண்டமாக பேசிக்கொண்டு இருக்கிறீர்களே.. அசிங்கமா இல்லையா?" என்று பேசி உள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications