குளுகுளுனு இருக்கா சீமான்.. நான்தான் சொன்னேனே! நீங்க ஜெயிக்க மாட்டீங்க! விஜயலட்சுமியின் புதிய வீடியோ
சென்னை: நீங்க தோப்பிங்கனு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். ஆனா இவ்வளவு பிரமாண்டமா தோப்பீங்க அப்படின்னு நான் எதிர்பார்க்கல. நான்தான் அப்பவே சொன்னேன் என்னோட சாபம் உங்கள ஜெயிக்க விடாதுன்னு என மீண்டும் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து இருக்கும் நிலையில் திமுக வேட்பாளரான சந்திரகுமார் பிரம்மாண்ட வெற்றி பெற்றிருக்கிறார். 17 சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 493 வாக்குகள் பெற்ற அவர் 90659 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

திமுகவை எதிர்த்து தமிழகத்தின் ஒரே பிரதான கட்சியான நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட நிலையில் அதன் வேட்பாளரான சீதாலட்சுமி 23 ஆயிரத்து 810 ஓட்டுகளை மட்டுமே பெற்று இருக்கிறார். அவர் டெபாசிட்டை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நீங்க தோப்பிங்கனு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். ஆனா இவ்வளவு பிரமாண்டமா தோப்பீங்க அப்படின்னு நான் எதிர்பார்க்கல என புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,"வாழ்த்துக்கள் சீமான் அவர்களே, நீங்க தோப்பிங்கனு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். ஆனா இவ்வளவு பிரமாண்டமா தோப்பீங்க அப்படின்னு நான் எதிர்பார்க்கல. நான்தான் அப்பவே சொன்னேன் என்னோட சாபம் உங்கள ஜெயிக்க விடாதுன்னு. இப்போ உங்களுக்கு குளுகுளுனு இருக்கா..
என்ன தமிழ்நாட்டு மக்கள் கூட வாழ விடாமல் தமிழ் கர்நாடகாவுக்கு ஓட்டுனீங்களே. அன்னைக்கு எனக்கு இப்படித்தான் இருந்தது. ஈரோடு மக்களுக்கு என்னோட நன்றிய தெரிவிச்சுக்கிறேன். மக்கள்தான் சீமானுக்கு சரியான அடிய கொடுக்க முடியும் அப்படின்னு நான் சொல்லி இருந்தேன். அதை இன்னைக்கு அவங்க நடத்திக் காட்டி இருக்காங்க.. பெரியாரே எனக்கு மண்ணு தான் அப்படின்னு சொன்ன வாய அட்ரஸ் இல்லாம மண்ணுக்குள்ள புதைச்சுட்டாங்க.. இன்னைக்கு திமுகவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..
Breaking
— U2 Brutus (@U2Brutus_off) February 8, 2025
"வாழ்த்துகள் சீமான்"
நாதக டெபாசிட் இழந்தமைக்கு சீமானுக்கு வாழ்த்துகள் கூறிய நடிகை விஜியலெக்ஷ்மி. pic.twitter.com/dvPVtllN4E
திமுக காலகட்டத்தில் தான் சீமான் நல்ல அடி வாங்கிக் கொண்டிருக்கிறார். அவர் வாங்கணும்.. ஏன்னா தோத்தால்தான் சீமான் மனுஷன் ஆவார். இல்லனா தலையை விரிச்சு போட்டு ஆடிட்டு இருப்பார். சீமான் அவர்களே கர்மா எப்படி நடக்குதுன்னு பாத்தீங்களா? நான் இங்க துடிச்சு கதறிக்கிட்டு இருக்கும்போது அவ கத்திகிட்டே கிடைக்கட்டும் அப்படின்னு உங்க வேலைய பாத்துட்டு பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருந்தீங்க..
மக்கள் என்ன பண்ணாங்க பாத்தீங்களா அவனும் கத்திகிட்டே கிடக்கட்டும் அப்படின்னு சொல்லிட்டு உங்கள கண்டுக்காம திமுகவுக்கு ஓட்டு போட்டு உங்களுக்கு நாமம் போட்டுட்டு போயிட்டாங்க,, இன்னும் நிறைய தோல்விகளை நீங்க சந்திப்பீங்க சீமான்.. உங்களுக்கு தான் விஜயலட்சுமி பிடிக்காது. உங்களுக்கு வெற்றியும் கிடைக்காது.. லட்சுமியும் கிடைக்காது" என கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ வெளியிட்டிருந்த விஜயலட்சுமி," கண்டிப்பா ஒரு நாள் நான் ஜெயிப்பேனு நீங்க சொல்லிக்கிட்டே இருக்கீங்க.. அப்ப உங்கள எல்லாம் உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்னு சொல்றீங்க.. கிடையவே கிடையாது.. இந்த ஜென்மத்துல நீங்க ஜெயிக்க மாட்டீங்க.. என்னோட சாபம் உங்கள ஜெயிக்க விடாது. இப்ப கூட நினைச்சுகிட்டு இருக்கீங்களா? தொண்டை வத்த வத்தக் கத்தினால் ஜெயிச்சிருவோம் என்று நினைத்தீர்களா? ஒன்றுமே கிடையாது" என அந்த வீடியோவில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications