என்னாது வாடகையா?.. எங்களை தங்க வைத்ததே அண்ணன் ஹரி நாடார்தான்.. மீண்டும் லைம்லைட்டில் விஜயலட்சுமி!
சென்னை: சென்னையில் தங்கியிருந்த விடுதியின் அறைக்கு வாடகை பாக்கி தராமல் அதை கேட்டால் தன்னை மிரட்டுவதாக நடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமி சமூகவலைதளங்களில் கண்டன வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கும் முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகின. படவாய்ப்பு இல்லாமல் அவதிப்படும் தனக்கு மூத்த கலைஞர்கள் உதவ வேண்டும் என கேட்டிருந்தார்.
இந்த நிலையில் இவர் சென்னை திநகரில் உள்ள விடுதியில் தனது சகோதரியுடன் தங்கியிருந்தார். 2 மாதங்களாக அந்த அறைக்கு வாடகை தராமல் இருந்துள்ளார்.

மருத்துவ சிகிச்சை
இந்த நிலையில் சகோதரியின் கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கடந்த மாதம் சென்றுவிட்டு விடுதிக்கு திரும்பினார். அப்போது அவரது உடைமைகளை விடுதி உரிமையாளர் உத்தரவின்படி வேறு அறைக்கு விடுதி ஊழியர் மாற்றியிருந்தார்.

ஆவேசம்
இதை பார்த்த நடிகை விஜயலட்சுமி ஆத்திரமடைந்து விடுதி ஊழியர் சிவாவை செருப்பால் அடித்து அநாகரீகமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இரு மாதங்களுக்கு ஒன்றரை லட்சம் வாடகை பாக்கி கேட்ட போது தரமுடியாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆண்
இதையடுத்து நடிகை விஜயலட்சுமி மீது விடுதி உரிமையாளர் கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து விஜயலட்சுமியிடம் கேட்டபோது நாங்கள் மருத்துவ சிகிச்சை முடித்துவிட்டு வந்த போது விடுதி குளியல் அறையில் ஒரு ஆண் குளித்துக் கொண்டிருந்தார்.

சாமான்கள்
இந்த விடுதியில் எங்களை தங்க வைத்ததே ஹரி நாடார்தான். அவருக்கு தெரியாமல் இந்த சம்பவம் எப்படி நடந்தது. வாடகை தரவில்லை என்றால் என்னை தங்க வைத்த ஹரி நாடாரிடம்தானே கேட்டிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு சாமான்களை எடுத்து வெளியே வீசுவது என்ன அர்த்தம்?

விஜயலட்சுமி தகவல்
யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள் என அண்ணன் ஹரி நாடார்தான் சொன்னார். நான் சென்னைக்கு வந்து இரு மாதங்களாகின்றன. இதுவரை ஹரிநாடாரிடம் நான் பண உதவியை கேட்டதே இல்லை. இதை யார் செய்தாலும் உங்களிடம் கேட்பது ஒன்றுதான், தயவுசெய்து எங்களை இனியாவது வாழ விடுங்கள் என விஜயலட்சுமி தெரிவித்தார்.

சலசலப்பு
பணங்காட்டு படை என்ற அரசியல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் ஹரி நாடார். இவரை நடமாடும் நகைக் கடை என அழைப்பதுண்டு. சினிமா பைனான்சியரான இவர் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நடிகை விஜயலட்சுமியின் புகாரால் அரசியல் களத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications