விந்தியா பேசும்போதே குறுக்கே நபர்.. மைக் ரிப்பேர்.. திமுகவையும் திட்டணும்.. கடலூரில் செம டென்ஷன்
சென்னை: தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக நட்சத்திரப் பேச்சாளர் நடிகை விந்தியா பிரச்சார மேடைகளில் தீப்பொறி வீசும் பேச்சால் கவனம் ஈர்த்து வருகிறார்.. சிதம்பரம் முதல் கடலூர் வரை அவர் முன்வைக்கும் கடுமையான விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.. அதே நேரத்தில் நெய்வேலி பிரச்சாரத்தில் ஏற்பட்ட மைக் கோளாறு மற்றும் தொண்டருக்கு அவர் அளித்த எச்சரிக்கை வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளரும், கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான நடிகை விந்தியா தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தனது வசீகரமான பேச்சினாலும், ஆவேசமான விமர்சனங்களாலும் திமுகவைச் சாடி வரும் விந்தியா, செல்லும் இடமெல்லாம் அரசியல் களத்தை அதிர வைத்து வருகிறார். குறிப்பாகச் சிதம்பரம் மற்றும் கடலூர் மாவட்டப் பிரச்சாரங்களில் அவர் முன்வைத்த விமர்சனங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
பிரபல நடிகை விந்தியா
சிதம்பரம் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய விந்தியா, திமுக அரசின் இந்து அறநிலையத்துறை செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். "கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்குக் கோயிலில் என்ன வேலை?" என்ற நேரடி கேள்வியுடன் தன்னுடைய பேச்சை ஆரம்பித்து, இந்து அறநிலையத்துறை தற்போது ஸ்டாலின் வீட்டுச் சமையலறையாக மாறியுள்ளது என்றெல்லாம் குற்றம் சாட்டினார்.
சிதம்பரம் கோயில் சொத்துகளையும், அதன் நிர்வாக உரிமைகளையும் பறிக்க திமுக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக அவர் வேதனை தெரிவித்தார். திருப்பரங்குன்றத்தில் முருகருக்கு எதிராக நீதிமன்றம் சென்றதைச் சுட்டிக்காட்டிய விந்தியா, அதற்கு அடுத்த நாளே முதலமைச்சர் ஸ்டாலின் கார் டயர் வெடித்ததை ஒரு குறியீடாகக் குறிப்பிட்டார்.
டென்ஷன் ஆன விந்தியா
"தமிழகத்தில் சைவத்துக்கும் வைணவத்துக்கும் சண்டையில்லை, இந்து - முஸ்லிம் இடையே சண்டையில்லை; ஆனால் இந்தச் சண்டைகளை எல்லாம் திமுக உருவாக்கப் பார்க்கிறது. மக்களின் உண்மையான பிரச்சனைகளை பேசாமல், "பாஜக வந்துவிடும்" என்று பூச்சாண்டி காட்டி திமுகவினர் ஓட்டு கேட்கிறது. இந்தத் தேர்தல் நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் இடையிலானப் போராட்டம்" என்றெல்லாம் விந்தியா முழங்கினார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காடாம்புலியூர் சந்திப்பில் விந்தியா உரையாற்றியபோது, விந்தியாவுக்கு சோதனையாக பல தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன.
அதாவது அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனை ஆதரித்து அவர் பேசிக்கொண்டிருந்தபோது, மைக் திடீரென வேலை செய்யாமல் போய்விட்டது... ஒருபுறம் திமுக அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சாடிக்கொண்டிருக்க, மறுபுறம் மைக் கோளாறு ஏற்பட்டதுமே விந்தியாவின் டென்ஷன் அதிகமாகிவிட்டது.. முக்கியமான அரசியல் கருத்துகளைப் பேசும் நேரத்தில் ஏற்பட்ட இந்தத் தடையால் அவர் மிகுந்த எரிச்சலுக்கு ஆளானார்.
தொண்டருக்கு வார்னிங்
மைக் கோளாறு ஒருபுறம் இருக்க, வாகனத்தின் அருகே நின்றிருந்த அதிமுக தொண்டர் ஒருவர் விந்தியா பேசுவதை சரியாக கவனிக்காமல், அவர் பேசும்போதே குறுக்கே பேசிக்கொண்டே இருந்துள்ளார்., அதுவும் விந்தியாவின் அருகில் நின்றுக்கொண்டு அந்த தொண்டர், தன் இஷ்டத்துக்கு பேசி கொண்டேயிருந்தார்.. இதனால் செம ஆத்திரமடைந்த விந்தியா, தன்னுடைய பேச்சை சட்டென நிறுத்திவிட்டு, அந்தத் தொண்டரை நோக்கி, "நான் பேசும்போது குறுக்கே பேசக்கூடாது, அதற்கு ஒரு மரியாதை இருக்கிறது" என்று மேடையிலேயே பகிரங்கமாக எச்சரித்தார்.
கடலூர் பாரதி சாலையில் எம்.சி. சம்பத்தை ஆதரித்துப் பேசும்போதும் இதே போன்ற அதிரடியைத் தொடர்ந்தார். ஒரு முதிர்ச்சியான அரசியல் பேச்சாளராகத் தனது கருத்துகளில் உறுதியாகவும், அதே சமயம் பிரச்சாரக் களத்தில் ஏற்படும் ஒழுங்கீனங்களைக் கண்டிப்பதிலும் விந்தியா காட்டிய வேகம், இந்தத் தேர்தல் களத்தில் அவரது "டென்ஷன்" வீடியோக்களை சோஷியல் மீடியாவில் வைரலாக்கி கொண்டிருக்கிறது..!!
-
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்!












Click it and Unblock the Notifications