சீமான் மாதிரி ஒருவருக்கு குரல் கொடுத்தால் உங்களை தப்பா நினைக்கமாட்டாங்களா அண்ணாமலை? கேட்பது நடிகை
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நல்லா Fight பண்ணுங்க என ஆதரவு கொடுத்ததற்கு, சீமான் மீது பலாத்கார புகார் தெரிவித்த நடிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் மீது பலாத்கார புகார் தந்த நடிகை வெளியிட்ட புதிய வீடியோவில் கூறியிருப்பதாவது: என்னுடைய கேஸ் வைத்துக் கொண்டு சீமானை திராவிட கட்சிகளும் பெரியாரிஸ்டுகளும் ஒரே அடியாக அடிப்பது போலவும், இதில் சீமான் சோர்வு அடையக் கூடாது; நன்றாக போராட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

அண்ணாமலை மீது மிகுந்த மரியாதை உண்டு.ஆனால் உங்கள் நண்பர் சீமான், ஈழத்திற்காக போராடியோ; கச்சத்தீவை மீட்கப் போராடியோ வழக்கை வாங்கவில்லை. உங்க நண்பர் சீமான், ஈழத்தில் தமிழர்கள் செத்துக் கொண்டிருந்த போது என்னுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தவர்.அப்படி குடும்பம் நடத்திய போது என் காசை எல்லாம் பிடுங்கிக் கொண்டவர்; பாலியல் ரீதியாக என்னை துன்பப்படுத்தி தெருவில் விட்டவர்.
இது பற்றி யாராவது சீமானிடம் கேட்டால், என்னை யார் என்றே தெரியாது என இதுநாள் வரை கூறி வந்தார். இப்ப திமுக கால கட்டத்தில்தான் கேட்க வேண்டிய விதத்தில் கேட்டதால், ஆமாம் நடிகையுடன் குடும்பம் நடத்தினேன் என ஒப்புக்
கொண்டார் சீமான். இதை அண்ணாமலை பார்க்கவில்லையா?
இதைவிட உலகமே காரித்துப்புகிற மாதிரி, அவ பாலியல் தொழிலாளி என சீமான் சொன்னாரே அதை அண்ணாமலை பார்க்கவில்லையா? திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான் ஏதோ சொல்லிவிட்டார் என சொல்லி ஒட்டுமொத்த பாஜகவும் இறங்கி போராடியது; குஷ்பு எல்லாம் பெரிய அளவில் குரல் கொடுத்தாங்க..
ஆனால் என்னை பாலியல் தொழிலாளி என சீமான் சொன்ன போது, ஏன் உங்க பாஜக கட்சியில் இருந்து யாருமே குரல் கொடுக்கவில்லை? என் விஷயத்தில் எந்த அரசியலும் இல்லை அண்ணாமலை அவர்களே! உண்மையில் சீமானை இந்த வழக்கில் இருந்து காப்பாற்றுவதே ஏதோ ஒரு பெரிய ஷக்திதான் என தோன்றுகிறது. இதனால்தான் திராவிட கட்சிகளும் பெரியாரிஸ்டுகளும், பாவம் என எனக்கு ஆதரவாக நேர்மையாக குரல் கொடுக்கின்றனர்.
சீமான், உங்களது (அண்ணாமலை) நண்பராக இருக்கலாம்; ஆனால் சீமான் மாதிரி ஒருவருக்கு அண்ணாமலை குரல் கொடுத்தால் உங்களை தவறாக நினைக்கமாட்டாங்களா? இவ்வாறு சீமான் மீது பலாத்கார புகார் தெரிவித்த நடிகை வீடியோவில் கூறியுள்ளார்.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு












Click it and Unblock the Notifications