ஆதம்பாக்கம் சத்யா இறந்துவிடுவார் என நான் நினைக்கவே இல்லை.. சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்!
சென்னை: ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் சத்யா இறந்து போவார் என நினைக்கவில்லை என கொலையாளி சதீஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த மாணிக்கம்- வரலட்சுமி தம்பதியின் மகள் சத்யா. இந்த தம்பதிக்கு மொத்தம் 3 மகள்கள். இவர்களில் சத்யா தி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13 ஆம் தேதி சத்யாவை சதீஷ் என்ற இளைஞர் ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டதில் சத்யா இறந்துவிட்டார். இந்த சதீஷ், சத்யா இருக்கும் அதே காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர்.

துரைப்பாக்கம்
இந்த கொலை தொடர்பாக துரைப்பாக்கத்தில் பதுங்கியிருந்த சதீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த நிலையில் சத்யா கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். கைது செய்து புழலில் உள்ள சதீஷை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தேன்.

சத்யா கொலை
சத்யாவை கொலை செய்த இடத்திற்கு சதீஷை போலீஸார் அழைத்து சென்று நடித்து காட்டுமாறு தெரிவித்தனர். அதை வீடியோவாகவும் போலீஸார் பதிவு செய்து கொண்டனர். சதீஷ் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நான் சத்யாவை உயிருக்கு உயிராக காதலித்தேன்.

சத்யாவின் தாய்க்கு பிடிக்கவில்லை
இது சத்யாவின் தாய்க்கு பிடிக்கவில்லை, இதனால் சத்யாவை அவரது சொந்தக்காரர் ஒருவருக்கு திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்துள்ளார். இதனால் என்னிடம் சத்யா சரிவர பேசவில்லை. இதனால் மனமுடைந்த நான் சத்யாவை தொடர்பு கொண்டு பல முறை பேச முயற்சித்தேன். ஆனால் அவர் பேசவில்லை.

சத்யா இறந்த வேதனை
மற்றபடி நான் படிக்காதவன் என்பதாலோ சரிவர வேலைக்கு செல்லாதவன் என்பதாலோ என்னை சத்யா வெறுக்கவில்லை. இதே போல் ரயில் நிலையத்திலும் அவரிடம் பேசினேன். ஆனால் சத்யா என்னை தவிர்த்தார். இதனால் கோபத்தில் அவரை ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிட்டேன். அவர் இறந்துவிடுவார் என நினைக்கவில்லை என்று சதீஷ் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒரு நாள் போலீஸ் விசாரணை முடிவடைந்தவுடன் சதீஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சத்யா இறந்த வேதனை தாங்க முடியாமல் அவருடைய தந்தை மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சத்யாவின் தாய் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். அவர் கேன்சருடன் போராடி வருகிறார்.












Click it and Unblock the Notifications