Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதானிக்கு மறக்க முடியாத நாள்.. ஒரே நாளில் இவ்வளவு பில்லியன் டாலர்ஸ் இழப்பா? உடம்பே சிலிர்க்குதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதானி குழுமம் மற்றும் செபி மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பல குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளது. இதன் காரணமாக நேற்று பங்கு சந்தை சரிந்தது. இந்தியப் பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள் மதிப்பு சரிவால், இன்று ஒரே நாளில் அக்குழுமத்துக்கு $2.4 பில்லியன் இழப்பு. அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பில், 1%-ஐ ஒரே நாளில் தவறவிட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் - அதானி பங்குகள் - செபி விவகாரத்தின் எதிரொலியாக, பங்குச்சந்தையில் பெரிதளவு தாக்கம் ஏற்படவில்லை என்றாலும், நேற்று வர்த்தகம் சற்று வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

hindenburg adani gautam adani

குற்றச்சாட்டு: கடந்த வருடம் அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பல குற்றச்சாட்டுகளை வைத்தது. இந்த விவகாரத்தில் அப்போது செபி பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றத்திலும் அதானிக்கு எதிராக உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான், அதானி குழுமம் முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) தலைவர் மாதபி புச்-க்கு பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டு உள்ளது. முறைகேட்டில் உடந்தை என்பதாலேயே அதானி குழுமம் மீது SEBI தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பரபரப்பு புகார் வைத்து உள்ளது.

என்ன புகார்?: அமெரிக்காவைச் ஹிண்டன்பர்க் ரிசர்ச் இந்தியாவின் பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையமான செபி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்துள்ளார். அதனால்தான் அதானி மீது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

அதாவது செபி அதானி மீது நடவடிக்கை எடுக்காமல் போனதற்கு செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்ததே காரணம். அதானி குழுமம் எந்த அச்சமும் இல்லாமல் பணிகளை செய்கிறது. இதற்கு செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு இடையே உள்ள உறவே காரணம்.

தற்போதைய செபி தலைவரும் அவரது கணவர் தவால் புச்சும், வினோத் அதானி பயன்படுத்திய அதே பெர்முடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பங்குச்சந்தை பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். அதானியின் பங்குகளில் இவர்கள் அதிக அளவில் முதலீடுகளை செய்துள்ளனர். அதானிக்கு சரிவு ஏற்பட்டால் தங்களுக்கும் சரிவு ஏற்படும் என்று செபி அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்று இதில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.

மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் முதலில் சிங்கப்பூரில் ஜூன் 5, 2015 அன்று ஐபிஇ பிளஸ் ஃபண்ட் 1 இல் தங்கள் கணக்கை தொடங்கி உள்ளனர். எங்களுக்கு கிடைத்த விசில்ப்ளோவர் ஆவணங்கள் மூலம் அந்த தம்பதியரின் நிகர மதிப்பு $10 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே பங்குகளில் அதானி குழுமமும் முதலீடுகளை செய்துள்ளது. செபி தலைவரும் அவரது கணவர் தவால் புச்சும், வினோத் அதானி பயன்படுத்திய அதே பெர்முடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பங்குச்சந்தை பங்குகளில் முதலீடு செய்துள்ளனர், என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை செபி மீது ஹிண்டன்பர்க் வைத்துள்ளது.

பங்குகள் சரிய வாய்ப்பு: அதானி குழுமம் மற்றும் செபி மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பல குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளது. இதன் காரணமாக நாளை பங்கு சந்தை ரத்தக்களரியாக இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. அதானி குழுமத்தின் பங்குகள் சரிய வாய்ப்புகள் உள்ளன. அந்த பங்குகளின் விளைவுகள் காரணமாக சங்கிலி விளைவு போல மற்ற பங்குகளின் மதிப்பும் சரியாய் வாய்ப்புகள் உள்ளன.

நாளை அதானி குழுமத்தில் இருந்து பலர் பங்குகளை எடுக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் அதானி குழுமம் காரணமாக மற்ற நிறுவனங்களின் பங்குகளும் சரியலாம். இது அதானி குழுமம் என்பதை தாண்டி செபி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஆகும். செபிதான் பங்கு சந்தை ஒழுங்காற்று வாரியம்.. அப்படிப்பட்ட வாரியம் புகாரில் சிக்கி உள்ளது.

இதனால் அதானி குழுமம் என்று இல்லாமல் மொத்தமாகவே பங்கு சந்தை சரிய வாய்ப்புகள் உள்ளன. மொத்தமாக பங்கு சந்தையில் பல பங்குகள் படுக்க வாய்ப்புகள் உள்ளன.

கடந்த வருடம் வைத்த புகார்: அதானி நிறுவனம் தனது வருமானத்தை பொய்யாக உயர்த்தி காட்டி உள்ளது, உறவினர்களை பயன்படுத்தி போலியான நிறுவனங்களை வெளிநாட்டில் தொடங்கி போலி பரிவர்த்தனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் பங்குகளை பொய்யாக உயர்த்தி அதை வைத்து கடனும் வாங்கி உள்ளது, அதாவது பொய்யாக கொண்டு வரப்பட்ட முதலீடுகள் மூலம் பொய்யாக உயர்த்தப்பட்ட பங்குகளை வைத்து கடன் வாங்கி உள்ளது. கையில் பணமே இல்லாமல் எல்லாம் பொய்யான முதலீடுகள் மூலம் வரவு செலவு இருப்பதாக காட்டி ஏமாற்றி உள்ளது.

தனது வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம் செய்துள்ளது என்று புகார்களை அதானி குழுமம் மீது இந்த ஹிண்டன்பர்க் வைத்தது. இதை அதானி குழுமம் மறுத்து இருந்தாலும், ஹிண்டன்பர்க் நிறுவனம் தங்கள் ரிப்போர்ட்டில் உறுதியாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+