பள்ளி மாணவர்களின் சிரமத்தை போக்க.. துருபிடிக்காத... பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சைக்கிள்கள்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதானி பவுண்டேசன் சார்பில் பள்ளி மாணவர்களின் சிரமத்தை போக்க துருபிடிக்காத பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சைக்கிள்கள் வழங்கியுள்ளன.

Recommended Video

    பள்ளி மாணவர்களின் சிரமத்தை போக்க.. துருபிடிக்காத... பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சைக்கிள்கள்..!

    திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி துறைமுக பகுதிக்குட்பட்ட கிராமங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளி மாணவ மாணவிகள் தினமும் 7 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று மிகவும் சிரமங்களுக்கிடையில் கல்வி பயின்று வருகின்றனர்.

    இதனால் கல்வியில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் பள்ளி இடைநிற்றல் அதிகமாகி வருவதை கருத்தில் கொண்டு அதானி பவுண்டேஷன் சார்பில் மாணவ மாணவிகளின் சிரமங்களைப் போக்கும் வகையில் சைக்கிள்கள் வழங்கி வருகின்றனர்.

    கடற்காற்று

    கடற்காற்று


    கடற்கரைப் பகுதிகளுக்கு ஏற்ற வகையில் கடற்காற்றினால் துருபிடிக்காத வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இதுவரை நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 214 பேருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி

    நிகழ்ச்சி

    இந்த ஆண்டு 300க்கும் மேற்பட்டோருக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில் இன்று (16.11.2020) அதானி பவுண்டேஷன், ‘அதானி காட்டுப் பள்ளி துறைமுகம்-சமுதாய வளர்ச்சி பணிகள்' சார்பாக, காட்டூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி காட்டூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    காட்டூர் கிராமம்

    காட்டூர் கிராமம்

    காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரேவதி சண்முகம், கவுன்சிலர் நந்தினி நீலவாணன், காட்டூர் கிராம மற்றும் காலனி சமுதாய தலைவர் பொன்னுரங்கம், பார்த்திபன், முருகன், பள்ளி தலைமை ஆசிரியை செல்லம்மாள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாணவ மாணவிகள்

    மாணவ மாணவிகள்

    துணை பொது மேலாளர் வெங்கடேசன் வரவேற்றார். அதானி பவுண்டேசன் தென்னிந்திய தலைவர் அனில் பாலகிருஷ்ணன், முதன்மை கல்வி அலுவலர் வெற்றி செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, வட்டார கல்வி அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர்.

    துறைமுக அலுவலர்கள்

    துறைமுக அலுவலர்கள்

    நிகழ்ச்சி முடிவில் மாணவ மாணவிகள் தாங்கள் பெற்றுக்கொண்ட புதிய சைக்கிள்களில் பேரணியாக சென்றனர். பேரணி இலக்கை பாதுகாப்பான முறையில் சென்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
    நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள், அதானி பவுண்டேசன் மற்றும் துறைமுக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+