சென்னைக்கு குட்நியூஸ்.. கிளாம்பாக்கத்தில் இருந்து மே 10, 11ல் கூடுதல் பஸ்கள்! பயணிகள் ஹேப்பி
சென்னை: கோடை விடுமுறையையொட்டி பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்று வருகின்றனர். இந்நிலையில் தான் வார இறுதி நாளான மே 10 (நாளை) மற்றும், நாளை மறுநாள் (மே 11) ஆகிய தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
சென்னையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர்களக்கு சென்று வருகின்றனர்.

குறிப்பாக வார இறுதி நாட்களில் வழக்கத்தை விட தற்போது பஸ் நிலையங்களில் அதிகளவிலான மக்கள் கூடுகின்றனர். இதனால் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சொந்த ஊர் செல்ல வசதியாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை (மே 10) மற்றும் நாளை மறுநாள் (மே 11) ஆகிய 2 நாட்கள் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‛‛வார இறுதி நாட்களில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து திருவண்ணாமலை திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை (அதாவது மே 10)ம் தேதி வழக்கத்தை விட 425 பஸ்களும், சனிக்கிழமையில் (அதாவது மே 11) வழக்கத்தை விட 505 பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 நாட்களில் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு மொத்தம் 935 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
அதேபோல் வார விடுமுறை முடிவடைந்த பிறகு தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சென்னை திரும்பி வர வசதியாக சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் ஞாயிற்றுக்கிழமையில் முக்கிய நகரங்களில் இருந்து சென்னை கிளாம்பாக்கத்துக்கு இயங்க உள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications