5 சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்து.. ககன்தீப் சிங்குக்கு அடித்த ஜாக்பாட்
சென்னை: சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு முதன்மை செயலாளர் பதவியில் இருந்து தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன் தீப் சிங் உள்பட 5 அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ககன் தீப் சிங் பேடி, தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால் ஆகியோர் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு ரேங்கிற்கு உயர்த்தப்படுகின்றனர்.

அதேபோல, தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.விஜயகுமார், சுற்றுலா, கலை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் ஆகியோர் முதன்மைச் செயலாளர் நிலையில் இருந்து கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு பெற்று இருக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் பதவி ஒன்றுதான் உள்ளதால், 5 அதிகாரிகளும் கூடுதல் தலைமைச் செயலாளர் என்று அழைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ககன் தீப் சிங்: முதல்வர் ஸ்டாலினின் குட்புக்கில் உள்ள அதிகாரிகள் பட்டியலில் இருக்கும் ககன் தீப் சிங், பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு நற்பெயரை பெற்றவர். 1993ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியைத் தொடங்கிய ககன் தீப் சிங் பேடி, குமரி மாவட்ட ஆட்சியராகவும், மதுரை, கோவையில் ஆணையராகவும் பணியாற்றினார்.
2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது கடலூர் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த ககன் தீப் சிங் பேடி மேற்கொண்ட நிவாரணப்பணிகள் அவருக்கு பெரும் பாராட்டுக்களை பெற்று கொடுத்தது. 2015ம் ஆண்டு வெள்ளத்தின் போது கடலூர் மாவட்டத்தில் ஒரு மாத காலம் இரவு பகல் பாராமல் பணியாற்றி, விரைவில் நிலைமை சீரடைய உதவினார்.
சுகாதாரத்துறை செயலாளர்: எந்த துறைக்கு போனாலும் அதில் சிறப்பாக பணியாற்றக்கூடியவர் என்று அறியப்படுவராக ககன் தீப் சிங் பேடி உள்ளார். கடந்த மே மாதம் தான், சென்னை மாநகாரட்சி ஆணையர் பொறுப்பில் இருந்து சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
-
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications