சொந்த ஊர் போறீங்களா? விமான பயணிகளுக்கு வந்த குட்நியூஸ்.. சென்னையில் இருந்து இனி ஈஸியா போகலாம்
சென்னை: கோடை விடுமுறையையொட்டி பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் உள்பட வெளிமாநிலங்களுக்கான விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் செமஸ்டர் தேர்வுகள் முடிந்து கல்லூரிகளுக்கும் கோடை விடுமுறை என்பது அளிக்கப்பட உள்ளது.

இதனால் சென்னையில் இருக்கும் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் கிளம்பி செல்கின்றனர். இதனால் சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு பெரிதும் பயனளித்து வருகிறது.
கூட்ட நெரிசலில் சிக்காமல் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர். அந்த வகையில் தான் கோடை விடுமுறையையொட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெரிய பெரிய நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், அரசு அதிகாரிகள், உயர் பதவிகளில் இருப்பவர்கள் தங்களின் சொந்த ஊர், உறவினர்கள் வீடு மற்றும் சுற்றுலா செல்ல விமான சேவைை தேர்வு செய்கின்றனர்.
இதனால் ஒவ்வொரு ஆண்டு கோடை விடுமுறையின்போதும் விமானங்களில் கூட்டம் அதிகம் இருக்கும். அந்த வகையில் தற்போதைய கோடை விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கான விமான சேவை என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது பல்வேறு முக்கிய நகரங்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக விமானங்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை நகரங்களுக்கும், கர்நாடகா தலைநகரான பெங்களூருவுக்கும், தெலுங்கானா தலைநகர் ஹைதரபாத், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. சுமார் 30க்கும் மேற்பட்ட விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் விமான சேவைகளால் கூட்டம் இன்றி மக்கள் பயணிக்க முடியும். அதோடு கூட்ட நெரிசல் காரணமாக டிக்கெட் கட்டணமும் உயராமல் இருக்கும். இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்கள் எடுத்த முடிவு.. பெங்களூர், மும்பை பயணிகளுக்கு அதிர்ச்சி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications