மிரட்டக் கூடாது.. சார், மேடம்னு தான் கூப்பிடனும்! போலீசாருக்கு ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம் அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையில், காவல்நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை மரியாதையுடனும் கனிவுடனும் நடத்த வேண்டும் என தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறையினரை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த மே மாதம் 5ஆம் தேதி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் பெரும் பரபரப்பு நிலவியது.

Police Law and Order davidson devasirvatham

சென்னையில் தொடர் கொலை சம்பவங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் எழுந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ராத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் ஏடிஜிபி அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.


இது மட்டுமல்லாமல் சேலம், நெல்லை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடந்ததால் தமிழக சட்ட ஒழுங்கு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதை அடுத்து காவல்துறையில் பெரிய அளவில் மாற்றம் நிகழ்ந்தது. சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டது போல தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தென் மாவட்டங்களில் கூலிப்படை மற்றும் மோதல்களை தவிர்க்கும் வகையில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தமிழக காவல்துறையினருக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறார். அதன்படி தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள ரவுடிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. இதனிடையே ரவுடிகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையில், காவல்நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை மரியாதையுடனும் கனிவுடனும் நடத்த வேண்டும் என தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறையினரை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுதொடர்பாக போலீசாருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,”அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்கள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகளுடன் மரியாதையான மற்றும் பயனுள்ள தகவல்தொடர்புகளை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் மற்றும் கீழ் பணிபுரிபவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் பேசும்போது மிஸ்டர், மிஸ்ஸஸ், சார், மேடம் என்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.

ஒருமையில் பேச வேண்டாம். பொதுமக்களின் குறைகளை கவனமாக கேளுங்கள். உங்கள் உடல்மொழி அச்சுறுத்தும் வகையில் இருக்கக் கூடாது. தெளிவான மற்றும் சுருக்கமான தகவலை வழங்கவும். பொதுமக்கள் புரிந்து கொள்ளாத வாசகங்கள் அல்லது தொழில்நுட்ப சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். கருணையுடன் பொதுமக்களிடம் செயல்படுங்கள். அவர்களிடம் ஆறுதலான மொழியை பயன்படுத்துங்கள். இது மக்கள் மனதில் நேர்மறையான உணர்வை ஏற்படுத்தும்.

கீழ் பணிபுரிபவர்களை அவர்களின் ரேங்க் மற்றும் பெயரால் அழைக்கவும். இது அவர்களுக்கு அங்கீகாரத்தை கொடுக்கும். கருத்துக்களை வழங்கும்போது, ​​தவறான முறையில் கண்டிப்பதை விட ஆக்கபூர்வமான விமர்சனத்தில் கவனம் செலுத்துங்கள். முன்னேற்றத்திற்கான பகுதிகளை எடுத்துரைக்கும் முன் நேர்மறையான அம்சங்களை முன்னிலைப்படுத்தவும். கீழ் பணிபுரிபவர்களின் கடின உழைப்பு மற்றும் சாதனைகளை அங்கீகரித்து பாராட்டுங்கள்.

பொதுவெளியில் பாராட்டுவது காவலர்களின் மன உறுதியையும் ஊக்கத்தையும் அதிகரிக்கும். குழுப்பணி மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் உள்ளடக்கிய மொழியைப் பயன்படுத்தவும். “நாங்கள்,” “எங்கள் குழு,” மற்றும் “ஒன்றாக” போன்ற சொற்றொடர்கள் கூட்டுச் சூழலை ஊக்குவிக்கின்றன. முக்கியமான தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்கள் முன் பேசாமல் தனிப்பட்ட முறையில் பேசுங்கள். இது தனிநபரின் கண்ணியம் மற்றும் தனியுரிமைக்கான மரியாதையைக் காட்டுகிறது.

வாய்மொழியாகவோ அல்லது எழுதப்பட்டதாகவோ, அனைத்து தொடர்புகளிலும் ஒரு தொழில்முறை தொனியை கடைபிடிக்க வேண்டும். இது போலீஸ் சேவையின் மரியாதை மற்றும் அதிகாரத்தை வலுப்படுத்தும். இந்தப் பழக்கத்தை நடைமுறைப்படுத்த உங்கள் அதிகாரிகள் மற்றும் அணிகளை ஊக்குவிக்கவும். நீங்கள் அவர்களைச் சந்திக்கும்போதோ அல்லது மதிப்பாய்வு செய்யும்போதோ இந்தத் அறிவுறுத்தல்கள் பற்றி அவர்களுக்குச் சொல்லுங்கள். இந்த எதிர்பார்ப்பு மக்களிடமும் கீழுள்ளவர்களிடமும் உள்ளது, எனவே எங்கள் தகவல்தொடர்புகளில் சில நேர்மறையான மாற்றங்களைச் செய்ய முயற்சிப்போம்” என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+