ஏடாகூடமாக சிக்கிய ஏடிஜிபி.. கடத்தல் ப்ளானில் ’அடுக்கம்’ அக்கா? ஜெயராம் - மகேஸ்வரி தொடர்பு எப்படி?
சென்னை: காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்த முயன்ற புகாரில் சிக்கிய ஏடிஜிபி ஜெயராம், பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நிறைவு பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராமை இழுத்து விட்ட அடுக்கம் மகேஸ்வரி யார்? ஜெயராமுக்கும் மகேஸ்வரிக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது? என்பது குறித்து அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், சென்னையில் பணியாற்றி வந்த விஜய்ஸ்ரீ என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். இருவரும் காதலித்த நிலையில் கடந்த மே 11ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி இருவரும் பதிவு திருமணம் செய்தனர்.
பெண்ணின் வீட்டார் அந்த பெண்ணை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனுஷின் வீட்டிற்குச் சென்ற பெண் வீட்டார் தனுஷின் 17 வயது தம்பியை தாக்கி காரில் கடத்திச் சென்றதாக சொல்லப்படுகிறது.

அந்த கார் காவல்துறைக்கு சொந்தமானதாக தகவல் வெளியான நிலையில், காவல்துறை காரில் சிறுவன் கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு சிறுவனின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், சிறுவனை இறக்கிவிட்டு அந்த கடத்தல் கும்பல் தப்பியது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அந்த கார் ஏடிஜிபி ஜெயராம் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது.
புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மகேஸ்வரி உள்ள ஐந்து பேரை கைது செய்தனர். புரட்சி பாரதம் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான பூவை ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். ஜெயராமிடம் சுமார் 20 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஏடிஜிபி சிக்கியது எப்படி என்பது குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த மகேஸ்வரி 2007 ஆம் ஆண்டு காவல்துறை பணிக்கு தேர்வானார். ஆனால் அவரது தங்கை மகேஸ்வரியின் சான்றிதழை பயன்படுத்தி காவல்துறையில் சேர்ந்ததாக அவரது கணவரே புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து அவர் காவல்துறை வேலையில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஜெயராம் எஸ்பியாக பணியாற்றிய போது ஆயுதப்படையில் பணியாற்றிய மகேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் விஜய் ஸ்ரீ மாயமானதும் அவரது தந்தை வனராஜ் மகளை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார். அப்போது வனராஜின் உறவினரான மணிகண்டன் மகேஸ்வரி குறித்து கூறியிருக்கிறார். தனக்கு எல்லா காவல்துறை அதிகாரிகளையும் தெரியும் என சொல்லியதோடு ஜெயராம், ஜெகன் மூர்த்தி ஆகியோருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து தான் இந்த சம்பவத்தில் ஏடிஜிபியில் கார் வந்துள்ளது. ஆனால் ஏடிஜிபி ஜெயராமோ போலீஸ் விசாரணையில் கோவிலுக்கு செல்ல வேண்டும் என மகேஸ்வரி காரைக் கேட்டதாகவும் அதனால்தான் தான் கொடுத்து என கூறி இருக்கிறார். உண்மையில் இந்த கடத்தல் சம்பவத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கிறது என்கின்றனர் விவரம் அறிந்த காவல்துறையினர்.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications