ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்!
விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு உள்கட்டமைப்பு மற்றும் பொதுப்பணித் துறையில் இதுவரை இல்லாத அளவிலான ஒரு மாபெரும் தொலைநோக்கு அடிப்படையில் முக்கியமான மாற்றத்தை செய்ய உள்ளது. அரசு அலுவலகங்கள் இனி ஐடி அலுவலகம் போல் பிரம்மாண்ட கட்டங்களாக கட்டப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இனிவரும் காலங்களில் கட்டப்படவுள்ள அனைத்து புதிய அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் அனைத்தும் தற்போதைய தேவையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், எதிர்காலத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு திட்டமிடப்படும் என்று தமிழகப் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடியாக அறிவித்துள்ளார்.
குறிப்பாக நிலத்தின் மதிப்பு அதிகமாக உள்ள நகரப் பகுதிகளில், பழைய மாடலில் மிகக் குறைந்த தளங்களைக் கொண்ட கட்டிடங்களைக் கட்டுவது அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதுடன், நிலத்தையும் வீணடிக்கும் என்பதால், புதிய உத்திகளைத் தமிழக அரசு கையில் எடுக்க உள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சிறிய கட்டிடங்களுக்கு குட்பை
நகர்ப்புறங்களில் நிலத்தின் விலை விண்ணைத் தொட்டு வரும் தற்போதைய பொருளாதாரச் சூழலில், தரைத்தளத்துடன் சேர்த்து இரண்டு அல்லது மூன்று தளங்களை (G+2 or G+3) மட்டுமே கொண்டு குறைந்த உயரங்களை கொண்ட கட்டிடங்களைக் கட்டுவது மூலம் நகர்ப்புற நிலத்தின் மதிப்பை குறைக்கும் விதமாக உள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதை தடுக்கும் விதமாக எதிர்காலத் தேவைகளை முழுமையாகச் பூர்த்தி செய்யும் நோக்கில், சாதகமாக உள்ள அனைத்து இடங்களிலும் தரைத்தளத்துடன் 15 தளங்கள் வரை கொண்ட (G+15 buildings) பிரம்மாண்ட அடுக்குமாடி அரசு கட்டிடங்களாக கட்டுவது குறித்து அரசு மிகவும் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் ஒரே இடத்தில் பல அரசுத் துறைகளை ஒருங்கிணைக்க முடியும்.
அடுத்த 40 ஆண்டுகால திட்டம்
அரசின் இந்த அதிரடி மாற்றுத் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் (Housing quarters) மற்றும் இதர அரசு வசதிகள் அனைத்தும் அடுத்த 40 ஆண்டுகால உள்கட்டமைப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டே பிரத்யேகமாக வடிவமைக்கப்படும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
தமிழக அரசு இனிவரும் காலங்களில் 'எஃப்எஸ்ஐ' (FSI - Floor Space Index) எனப்படும் அடுக்குமாடி கட்டுமானப் பரப்பு குறியீட்டை உயர்ந்த அளவில் பயன்படுத்த உள்ளது உறுதியாகியுள்ளது.
-
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவசர டெல்லி பயணம்.. நிதின் கட்கரியுடன் முக்கிய மீட்டிங்.. என்ன காரணம்? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications