சூப்பராக வேலை செய்யும் ஆதித்யா எல்-1 சென்சார்கள்! சூரிய புயலை கச்சிதமாக படமெடுத்து அசத்தல்
சென்னை: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், சூரியனிலிருந்து வெளிவந்த சூரிய புயல்களை பல்வேறு கோணங்களில் படம் பிடித்திருக்கிறது.
இந்திய விண்வெளி துறையில் சந்திரயான் 3க்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிஷன், ஆதித்யா எல்1 தான். இதற்கு முன்னர் இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய எந்த விண்கலமும் அனுப்பப்படவில்லை. ஆதித்யா எல்1 தான் முதல் விண்கலம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம், சுமார் 127 நாட்கள் பயணித்து, பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்'(எல்-1) எனும் இடத்தில், சூரியனை பார்த்தவாறு சமீபத்தில்தான் நிலை நிறுத்தப்பட்டது.

பின்னர் விண்கலத்தில் உள்ள கருவிகள் தற்போது செயல்பட தொடங்கியுள்ளன. அதாவது, சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT) மற்றும் விசிபிள் எமிஷன் லைன் கரோனாகிராஃப் (VELC) ஆகிய கருவிள் சூரிய புயல்களை தெளிவாக படம்பிடித்திருக்கிறது. கடந்த மே மாதம் 10-11 தேதிகளில் சூரியனிலிருந்து சூரிய புயல் வெளிவந்தது. இது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனை சர்வதேச நாடுகளை சேர்ந்த விண்கலன்கள் படம் பிடித்தன. ஆனால் ஆதித்யா எல்-1-ஆல் படம் எடுக்க முடியவில்லை.
இருப்பினும் மே 14ம் ஆதித்யா எல்-1-ன் SUIT மற்றும் VELC கருவிகள் சூரிய புயல்களை பல்வேறு கோணங்களில் தெளிவாக படம்பிடித்தது. இதில் சூரியனின் காந்த பகுதிகளை தெளிவாக பார்க்க முடிகிறது. அதேபோல சூரிய புள்ளிகள் உள்ளிட்டவற்றையும் ஆதித்யா தெளிவாக படம் பிடித்திருக்கிறது.
இதற்கு முன்னரும் கடந்த பிப்ரவரி மாதம் இதேபோல சூரிய புயல்கள் வெளியாகியிருந்தன. அப்போதும் பாபா(PAPA) எனும் கருவி அதை தெளிவாக படம்பிடித்திருந்தது.
பாபா ஒரே கருவியாக இருந்தாலும், இதில் இரண்டு சென்சார்கள் இருக்கின்றன. இந்த சென்சார்கள் சூரியக் காற்றின் துகள்களின் அளவு மற்றும் அது எந்த திசையிலிருந்து வருகிறது என்பதை அளவிட பயன்படுகிறது.
சரி ஏன் இந்த அளவீடுகள் முக்கியம் என்கிற கேள்வி எழலாம். அதற்கும் விஞ்ஞானிகள் பதிலளித்துள்ளனர். அதாவது, சூரியனிலிருந்து வெளிவரும் காந்த புயல்கள் செல்ஃபோன் தொடங்கி, டிவி, கம்ப்யூட்டர் என எல்லா எலக்ட்ரானிக் சாதனங்களையும் முற்றிலுமாக செயலிழக்க வைத்துவிடும். இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க எலக்ட்ரானிக் சாதனங்களைதான் நாம் பயன்படுத்தி வருகிறோம். அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக பேரழிவு ஏற்படும்.
எனவே இந்த பேரழிவை முன்கூட்டியே கண்காணிக்க கரோனல் மாஸ் எஜெக்ஷன் எனப்படும் சூரிய புயல்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். இந்த பணியைதான் இந்தியாவின் ஆதித்யா எல்1 வெகு சிறப்பாக செய்து வருகிறது என்று இஸ்ரோ தற்போது உறுதி செய்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications