திக்திக்.. பூமியின் ஈர்ப்பு மண்டலத்தை விட்டுப்போன ஆதித்யா எல்-1.. அடுத்த என்ன? இஸ்ரோ மேஜர் அப்டேட்
சென்னை: சூரியன் ஆய்வுக்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியின் ஈர்ப்பு மண்டலத்தை கடந்து 9.2 லட்சம் கிலோமீட்டரை கடந்து லாக்ரேஞ்ச் எல் 1 புள்ளியை நோக்கி பயணித்து வருகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த என்ன நடக்கும் என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
சூரியனின் மேல்வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆராய்ச்சி செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த 2ம் தேதி காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் சீறிப்பாய்ந்தது.
அதன்பிறகு அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் பிஎஸ்எல்வி - சி57 ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு பூமியின் சுற்றுவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி மொத்தம் 5 படிநிலைகளில் விண்கலத்தின் புவி சுற்றுவட்டபாதை என்பது வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதித்யா எல்-1 விண்கலம் பிரச்சனைகள் ஏதுமின்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த விண்கலம் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1 புள்ளியில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்படும்.
அதன்பிறகு விண்கலத்தில் உள்ள 7 கருவிகள் ஆய்வை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. சூரியனின் மேற்வளிமண்டலம், வெளிப்புற அடுக்கு குறித்த ஆய்வுகளை ஆதித்யா எல் -1 விண்கலம் மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் தான் ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்த இஸ்ரோ முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛பூமியில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் 9.2 லட்சம் கிலோமீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்துள்ளது. பூமியின் ஈர்ப்பு மண்டல பகுதியை விட்டு வெளியேறியுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள லாக்ரேஞ்ச் எல்1 புள்ளியை நோக்கி பயணித்து வருகிறது.
பூமியின் ஈர்ப்பு மண்டல பகுதியை இஸ்ரோவின் ஆய்வுக்கலம் தாண்டுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு செவ்வாய் கோள் ஆய்வுக்கான ஆர்பிட்டர் பூமியின் ஈர்ப்பு மண்டலத்தை கடந்து சென்றிருந்தது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications