மோடி ஜி-யின் பேராசை.. இந்து தர்மம் என்ன சொல்லுதுன்னா.. ஆதித்யா எல்1 முட்டாள்தனம் - காயத்ரி காட்டம்
சென்னை: சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் செலுத்தி இருக்கும் நிலையில், இது முட்டாள்தனமானது என பாஜக முன்னாள் நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தெரிவித்து உள்ளார்.
"சில காரணங்களால் நான் ஆதித்யா L1 உடன் உடன்படவில்லை. இது முற்றிலும் முட்டாள்தனமாக உணர்கிறேன். இந்து தர்மத்தின் படி சூரியன் நமது கடவுள். நாம் வாழும் ஒவ்வொரு உயிரினமும் அதனால் தான் உயிர் வாழ்கிறது. இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கிரகமும் அதன் காரணமாகவே உயிர் வாழ்கிறது.

சூரியனுக்கு ராக்கெட்டை அனுப்புவதும், அதைப் படிப்பதும் இயற்கையை சீர்குலைக்கிறது. மனிதர்களாகிய நாம் பூமியை மட்டுமல்ல முழு பிரபஞ்சத்தையும் அழிக்கிறோம். இதனால் சில சில கிரகங்கள் அல்லது நமது பூமியில் கூட இயற்கை சீற்றம் ஏற்படலாம்.
நம் நாட்டைக் கவனித்துக்கொள்வதற்குப் பதிலாக, அந்தச் பணத்தை ஏழைகளுக்குச் செலவிடுவதற்குப் பதிலாக, நமது பூமியை பாதுகாப்பதற்கு பதிலாக நாம் இயற்கைக்கு எதிராக செல்கிறோம். சந்திரன் சூரியன் அல்ல, சூரியன் உச்ச சக்தி. மோடி ஜி பேராசையின் காரணமாக இந்த ஆதித்யா L1 கணிக்க முடியாத ஒன்றாக இருக்கும், ஆபத்தாக இருக்கலாம்.
நாம் பூமியிலிருந்து மாறி சந்திரன் அல்லது சூரியன் அல்லது செவ்வாய் கிரகத்தில் வாழப் போகிறோமா? நமது நாட்டில் பொருளாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை கடினமாக உள்ளது. தயவு செய்து ஒரு சாமானியர் மற்றும் நம் தேசத்தின் மீது கவனம் செலுத்துங்கள். நேர விரயம் மற்றும் பண விரயம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்டு உள்ள ஆதித்யா எல்1 விண்கலம் இன்று காலை 11.50 மணியளவில் ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. PSLV C57 ராக்கெட் விண்ணில் சுமந்து சென்றது. இதனை ஏவுவதற்கான கவுன்டவுன் நேற்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது . 100 முதல் 120 நாட்கள் பயணிக்கும் இந்த விண்கலம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சமமான ஈர்ப்பு விசையை கொண்டு உள்ள எல்1 என்ற புள்ளியை அடைய உள்ளது.
அதன் சுற்றுவட்டப் பாதையை அடைந்தவுடன் ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய புயல், கொரோனா, பிளாஸ்மா குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்தியாவால் சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் முதல் சூரிய ஆய்வு விண்கலம் இதுவாகும். தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நிகர் சாஜி தலைமையிலான குழு கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை வடிவமைத்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications