அதிமுக லீடர்களை விடுங்க.. பாஜகவை சரமாரியாக அட்டாக் செய்யும் ஜெகன் மூர்த்தி.. டெபாசிட்டே காலியாம்!
சென்னை: அதிமுக ஆதரவு இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஒரு சீட் கூட பாஜகவால் வெல்ல முடியாது, டெபாசிட் காலி தான் என புரட்சி பாரதம் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கூட்டணி கட்சியான அதிமுகவை பல்வேறு தருணங்களில் தொடர்ந்து சீண்டி வந்தார். இதனால், பாஜக - அதிமுக இடையே உரசல் இருந்து வந்தது. அண்மையில், அண்ணாமலை, அண்ணா பற்றி பேசியது இந்த உரசலை பெரிதாக்கியது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அண்ணாமலையை எதிர்த்துப் பேச, இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட தொடர் மோதலால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. இது பாஜகவுக்கு பெரிய ஷாக் ஆக அமைந்தது. தலைவர்கள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்தால், இந்த கூட்டணி முறிவு ஏற்பட்டதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் கணிசமான இடங்களில் வெற்றி பெறத் திட்டமிட்டு வரும் பாஜக, அதிமுகவின் இந்த திடீர் பாய்ச்சலால் அதிர்ந்து போயுள்ளது. அதன்பிறகு பாஜகவினர் இந்த விஷயத்தில் அமைதி காத்து வருகின்றனர். அதேசமயம், அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பிற கட்சிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றன. ஜிகே வாசன், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என கூறி வருகின்றனர்.
இதற்கிடையே, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை அடுத்து அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடர்ந்து அங்கம் வகிக்கும் எனத் தெரிவித்தார். இந்நிலையில், இன்று பாஜகவை சரமாரியாக விளாசி பேட்டி தட்டியுள்ளார் ஜெகன் மூர்த்தி.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜெகன் மூர்த்தி, "பாஜகவை எதிர்த்தாலோ, அவர்களது கூட்டணியில் இருந்து வெளியேறினாலோ அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தி நெருக்கடி தந்து வருகிறது பாஜக. தங்களை எதிர்த்தால் அமலாக்கத்துறை சோதனை என அராஜகம் செய்து வருகிறது பாஜக.
தமிழ்நாட்டில் பாஜகவின் அமலாக்கத்துறை சோதனை ஒருபோதும் எடுபடாது. அராஜகம், மிரட்டல், அச்சுறுத்தல் உள்ளிட்டவை இங்கு எடுபடாது. பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் வாழ்ந்த பூமி இது. திராவிட பாரம்பரியம் இருக்கின்ற பூமி, இதில் அவர்களை அவதூறாக பேசி, விமர்சனம் செய்து அரசியல் செய்ய நினைத்தால் அது கண்டிப்பாக நடக்காது.
கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது பாஜகவுக்கு தான் இழப்பு. அதிமுக ஆதரவால் தான் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக பெற்றிருக்கிறது. அதிமுக ஆதரவு இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஒரு சீட் கூட பாஜகவால் வெல்ல முடியாது. லோக்சபா தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் டெபாசிட் இழக்கும். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் அதிமுகவுக்கு புரட்சி பாரதம் என்றும் உறுதுணையாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தமிழ்நாட்டில் எம்.பி சீட் 39-லிருந்து 59 ஆக உயரும்.. எண்ணிக்கை குறையாது.. - அண்ணாமலை சொன்ன தகவல் -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா?












Click it and Unblock the Notifications