அந்த பெண் எங்க காப்பிரைட்- எங்களுக்குதான் சொந்தம்..விளம்பரத்திலும் திமுக- அதிமுக வம்படி பஞ்சாயத்து
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் யார் யாரை பார்த்து காப்பி அடிக்கிறார்கள் என்கிற விவகாரத்துக்காகவே தனி வாக்கெடுப்பு நடத்தும் அளவுக்கு கூத்துகள் நடந்து கொண்டிருக்கின்றன.
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு இருந்தே காப்பி அடித்தல் பஞ்சாயத்து தொடங்கிவிட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டம் ஒன்றில் அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார்.
இதனையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதையே அரசு அறிவிப்பாக வெளியிடுவார். உடனே திமுக, இந்த ஸ்டாலின் சொல்றார்... அந்த பழனிசாமி செய்கிறார் என பாட்டுப்பாடும். இதற்கு லாவணி கச்சேரியாக, எங்க ஆளுங்க ஆர்வ கோளாறில் கசியவிட்டுறாங்க என சிரித்துக் கொண்டே சமாளிப்பார் முதல்வர் எடப்பாடியார்.

பஞ்சாயத்துக்கு வந்த கமல்
இதற்கு அடுத்து திருச்சி பொதுக்கூட்டத்தில் 7 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் ஸ்டாலின். அதில் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என்பதும் ஒன்று. உடனே மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், இது எங்களுடைய உறுதிமொழி. அதை அவுக காப்பி அடிச்சுட்டாங்க என கலாய்த்தார்.

பஞ்சாயத்துக்கு வந்த கமல்
இதற்கு அடுத்து திருச்சி பொதுக்கூட்டத்தில் 7 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் ஸ்டாலின். அதில் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என்பதும் ஒன்று. உடனே மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், இது எங்களுடைய உறுதிமொழி. அதை அவுக காப்பி அடிச்சுட்டாங்க என கலாய்த்தார்.

திமுக- அதிமுக விளம்பரம்
இதன் உச்சம்தான் இப்போது நடந்து வருவது... திமுக சார்பில் வளரும் வாய்ப்புகள்- வளமான தமிழகம் என்கிற விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் அதிமுக ஐடி விங் தரப்பிலும் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரு விளம்பரங்களிலும் ஒரே பெண் ஒரே உடையில் இடம்பெற்றிருப்பதுதான் சர்ச்சையாகி உள்ளது.

அந்த மாடல் பெண்
அந்த விளம்பர மாடலின் படத்தை பயன்படுத்த நாங்கள் காபி ரைட் பெற்றிருக்கிறோம்.. எங்களை பார்த்து காப்பி அடித்துவிட்டது அதிமுக என்கிறது திமுக. ஆனால் அதிமுக தரப்போ, நாங்க ஜனவரி மாதம் வெளியிட்ட விளம்பரத்திலேயே அந்த விளம்பர மாடல் பெண்ணின் படம் இடம்பெற்றிருந்தது. திமுகதான் எங்களை காப்பி அடித்துவிட்டது என பஞ்சாயத்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

போன தேர்தலிலும்...
கடந்த 2016 சட்டசபை தேர்தலிலும் இப்படி ஒரு நடுத்தெரு பஞ்சாயத்து நடைபெற்றது. திமுக- அதிமுக விளம்பரங்களில் முதியவர் ஒருவரே மாறி மாறி இடம்பெற்றிருந்தது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.
-
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications