தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எதிரொலி.. அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை வர கட்சித் தலைமை உத்தரவு?
Recommended Video

சென்னை: தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியாகும் நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் சென்னைக்கு வருமாறு தலைமை கழகம் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டதாக தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து 18 பேரும் உயர்நீதிமன்றத்தை நாடினர்.

இதில் இரு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு 3-ஆவது நீதிபதி சத்தியநாராயணாவிடம் சென்றது. அவர் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளார்.
தீர்ப்பு அரசுக்கு பாதகமாக வந்தால் பேரங்கள் நடைபெறும் என்பதால் 18 எம்எல்ஏக்களையும் குற்றாலத்தில் தங்க வைத்துள்ளார் தினகரன். இந்த நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் திடீர் ஆலோசனை கூட்டம் நடந்தது.
[செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்.. ஆளுநரும்தான்.. அடுத்தடுத்த நிகழ்வுகளால் சூடாகும் தமிழக அரசியல்!]
அப்போது தீர்ப்பு சாதகமாக வந்தால் ஓகே. ஆனால் பாதகமாக வந்துவிட்டால் என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை நடந்தது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு அதிமுக தலைமை கழகம் திடீர் உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications