செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்.. ஆளுநரும்தான்.. அடுத்தடுத்த நிகழ்வுகளால் சூடாகும் தமிழக அரசியல்!
Recommended Video

சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்து வருவதால் மாநில அரசியல் சூடுபிடித்துள்ளது.
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு இன்றைய தினம் தமிழக அரசியல் சூடு பிடித்துள்ளது. காரணம் அதிமுக அரசின் மீது கத்தி தொங்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில் அதை சமாளிக்க பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.

அதிமுக அரசு
தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இதில் தீர்ப்பு அரசுக்கு ஆதரவாக வந்ததால் அரசு தப்பியுள்ளது. அதேசமயம், எதிராக வந்திருந்தால் பெரும் பரபரப்பாகியிருக்கும்.

ஆலைகளில் அதிரடி ரெய்டு
இந்நிலையில் இன்னும் இரண்டரை ஆண்டுகால ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியாகும் நிலையில் விவி மினரல்ஸ் வைகுண்டராஜன் ஆலைகளில் அதிரடியாக ரெய்டு நடந்துள்ளது.

அமைச்சரும் டெல்லி பயணம்
அதே வேளையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் இன்று டெல்லி செல்கிறார். ஆனால் அவர் யாரை பார்க்கிறார் என்பது தெரியவில்லை. அதுபோல் அமைச்சர் செங்கோட்டையனும் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அவரும் யாரை சந்திக்கவுள்ளார் என தெரியவில்லை. எனினும் அவர் கல்வி துறை சார்பாக அங்கு நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்எல்ஏக்கள் கூட்டம்
மறுபக்கம் தி்முக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. எனவே அடுத்தடுத்து நிகழும் இந்த பரபரப்புகளால் அரசியல் களம் சூடாகியுள்ளது. எனவே தீர்ப்பை பொருத்தே என்ன நடக்கும் என்பது தெரியும். ஒரு வேளை மேல்முறையீடு செய்ய இரு தரப்பும் முயற்சிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
பத்திரிகையாளர்களை மிரட்டினாரா செங்கோட்டையன்.. முற்றிய வாக்குவாதம்.. ப்ரஸ்மீட்டில் பரபரப்பு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications