சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக வேட்பாளரை சுட்டிக் காட்டி.. அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்த எடப்பாடியார்.. செம டெக்னிக்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக வேட்பாளர்கள் தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தியதுதான் இப்போது அந்த கட்சியின் ஹாட் டாபிக்காக இருக்கிறது.

அதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. பாமக, பாஜகவுடன் தொகுதி எண்ணிக்கை பங்கீடு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிகவுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

அதிமுக வேட்பாளர் பட்டியல்

அதிமுக வேட்பாளர் பட்டியல்

இந்த நிலையில்தான் ஈபிஎஸ், ஓபிஎஸ் உட்பட 6 பேர் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக அதிரடியாக அறிவித்து பரபரப்பை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக தலைமை கழகத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

மா.செக்களுக்கு நேர்காணல்

மா.செக்களுக்கு நேர்காணல்

இந்த ஆலோசனையின் போது மாவட்ட செயலாளர்களிடம் ஒவ்வொரு தொகுதியிலும் 3 பேர் பட்டியலை கொடுத்துள்ளனர். அந்த 3 பேரின் ஜாதி பலம், பண பலம், சொந்த செல்வாக்கு குறித்து மாவட்ட செயலாளர்களிடம் ஓபிஎஸ், ஈபிஎஸ் கேட்டறிந்தனர்.

திமுக வேட்பாளர்

திமுக வேட்பாளர்

அத்துடன் இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக அந்த நபர் போட்டியிட்டால் அவரை இவரால் எதிர்கொள்ள முடியுமா? ஜெயித்துவிடுவாரா? எனவும் மாவட்ட செயலாளர்களிடம் கேட்டிருக்கின்றனர். கடைசியாக உங்கள் சாய்ஸில் யாருக்கு கொடுக்கலாம் என்ற பதிலையும் கேட்டு வாங்கி இருக்கின்றனர்.

சிலாகிக்கும் மா.செ.க்கள்

சிலாகிக்கும் மா.செ.க்கள்

அதிமுகவில் ஒரே நாளில் 8,000 பேருக்கு மேல் நேர்காணல் நடத்தினர். அதனையடுத்து மாவட்ட செயலாளர்களிடம் புதுவிதமாக எடப்பாடியார் நடத்திய நேர்காணலை சிலாகிக்கின்றனராம் அதிமுக மாவட்ட செயலாளர்கள்.

English summary
Tamilnadu Chief Minister Edappadi Palaniswami hold disucssions with ADMK District Secretaries for Candidate Selection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X