எம்.ஜி.ஆர். 32-வது நினைவுத்தினம்... நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை
சென்னை: அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 32-வது நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
மேலும், அதைத்தொடர்ந்து நினைவிடம் அருகிலேயே அதிமுகவை உயிரினும் மேலாக பேணி காப்போம் என ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். உள்ளிட்ட உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
எம்.ஜி.ஆர். காலத்து அதிமுக சீனியர்கள் மட்டும் கருப்புச்சட்டை அணிந்தவாறு நினைவஞ்சலி செலுத்தினர். மற்றவர்கள் வழக்கம் போல் ஒயிட் அண்ட் ஒயிட் உடைகளிலேயே அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.

எம்.ஜி.ஆர்.நினைவுதினம்
அதிமுக நிறுவனரும், முதலமைச்சராக இருந்து மறைந்தவருமான எம்.ஜி.ஆரின் 32-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

சூளுரை
எம்.ஜி.ஆர். நினைவிட நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க அதை அங்கு கூடியிருந்த கட்சியினர் அதனை பின் தொடர்ந்து கூறினர். அதிமுகவை உயிரினும் மேலாக மதித்து காப்போம் என சூளுரைத்தனர்.

அடிச்சுவடு
அதிமுக ஆயிரங்காலத்து பயிர் என்றும் அதனை யாராலும் அழிக்க முடியாது எனவும் சூளுரை வாசித்தனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரின் அடிச்சுவட்டை பின்பற்றி அதிமுக செயல்படுவதாக ஓ.பி.எஸ். கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆரின் பெருமைகளை பட்டியலிட்டார்.

சீனியர் நிர்வாகி
எம்.ஜி.ஆருக்கு நினைவஞ்சலி செலுத்த வந்த அதிமுக நிர்வாகிகளில் எம்.ஜி.ஆர் காலத்து ஆட்கள் மட்டும் கருப்புச்சட்டை அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர். மேலும், அமைச்சர்கள் பலர் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் எம்.ஜி.ஆர். நினைவுதின மரியாதை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications