• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"லீக்" ஆன ஆடியோ.. மாஜி அமைச்சர் போடும் புது பிளான்.. கிறுகிறுப்பில் அதிமுக, பாமக..!

|

சென்னை: மாஜி அமைச்சர் சிவி சண்முகம், படுதோல்வியை சந்தித்துவிட்ட நிலையில், மறுபடியும் எம்எல்ஏவாக முயற்சிக்கிறாராம்.. ஆனால் இவர் போட்டு வரும் ஸ்கெட்ச்தான் அனைவரையும் அதிர வைப்பதாக உள்ளதாம். குறிப்பாக அதிமுகவும் பாமகவும் மலங்க மலங்க விழித்து கொண்டிருக்கின்றன..!

அதிமுகவின் முக்கிய தலைகளில் ஒருவர் சி.வி. சண்முகம்.. சட்டத்துறை அமைச்சராக இருந்தவர்.. தன்னுடைய ஒவ்வொரு பேட்டியையும் பரபரப்பாக்கியவர்.. அதை ஒட்டுமொத்த அரசியலையும் பேச வைத்தவர்..

எதையாவது கொளுத்தி போட்டு, சர்ச்சையில் சிக்கி கொள்பவர். 2 நாளுக்கு முன்பு வரை சசிகலாவை இவர் எதிர்த்து பேசிய விவகாரம் இன்னமும் பேசப்பட்டு வருகிறது. விழுப்புரம் அதிமுகவையே பல காலமாக தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தவர்.. வன்னியர் சமூகத்தின் வாக்குகளை ஒவ்வொரு தேர்தலின்போதும் அள்ளியவர்.

பாமக

பாமக

எனவே, இந்த முறையும் தன் சமூக மக்களை நம்பியே இவர் போட்டியிட்டார்.. போதாக்குறைக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடும், பாமகவுடன் கூட்டணி, சொந்த செல்வாக்கு போன்றவைகளை மலைபோல் நம்பி களமிறங்கினார். ஆனால், இதுவரை எது இவருக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருந்ததோ, அதே வன்னியர் சமூகத்தின் அதிருப்தியை சம்பாதித்தார்.. தோல்வியையும் தழுவினார்.

ஷாக்

ஷாக்

இது அதிமுக தலைமைக்கே ஷாக் தந்தது.. எடப்பாடி பழனிசாமி வடமாவட்ட தலைவர்களைதான் அதிகமாக நம்பியிருந்தார்.. கொங்குவை தான் நேரடியாக பார்த்து கொண்டாலும், வடக்கை சிவி சண்முகம் போன்றோர் கைவிட மாட்டார்கள் என்று கடைசிவரை நம்பினார்.. ஆனால் அவரது நம்பிக்கையும் தவிடுபொடியாகிவிட்டது.

 மயிலம் தொகுதி

மயிலம் தொகுதி

இறுதியில் சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் சிலர் வெற்றி பெற்றது அதைவிட ஷாக்கை தந்தது... வன்னியர் சமூகத்தின் மிக முக்கிய தலைவர் என்பதால், அதிமுகவில் மட்டுமல்லாமல் பாமகவிலும் இவருக்கு ஆதரவாளர்கள் இருக்கின்றனர். அந்த வகையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களை சிவி சண்முகம் சந்தித்து பேசினார். அப்போது, இவருக்கு பக்கத்திலேயே மயிலம் தொகுதி பாமக எம்எல்ஏ சிவகுமார் உட்கார்ந்திருந்தார்.

ஸ்கெட்ச்

ஸ்கெட்ச்

இன்று சிவக்குமார் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமே சண்முகத்தின் ஸ்கெட்ச் மற்றும் பீல்டு ஒர்க்தான்.. இந்த நிகழ்வுக்கு பிறகுதான் ஒரு ஆடியோ கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன... அதாவது, சிவக்குமாரை ராஜினாமா செய்ய வைத்து அவரை அதிமுகவுக்கு கொண்டுவந்துவிட்டால், அந்த தொகுதியில் சிவி சண்முகமே ஸ்ட்ரைட்டாக களமிறங்கி போட்டியிட யோசித்து வருகிறாராம்..

 பொறுப்பு?

பொறுப்பு?

மேலும், அதிமுகவுக்கு வரும் சிவக்குமாருக்கு மிகப்பெரிய பொறுப்பையும் தருவது, இதற்காக சிவக்குமாரிடம் சிவி சண்முகம் தரப்பு, பெரிய அளவில் பேரத்தை நடத்தியதாகவும் அந்த ஆடியோவில் தகவல்கள் வெளியாகி உள்ளதாக சொல்கிறார்கள்..

 அதிர்ச்சி

அதிர்ச்சி

இது அதிமுக, பாமக தரப்பில் அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளதாம். இது எந்த அளவுக்கு உண்மை, உண்மையிலேயே இப்படி ஒரு திட்டத்தை சண்முகம் வைத்துள்ளாரா என்றும் தெரியவில்லை. இந்த ஆடியோ சம்பந்தமாக இதுவரை சிவி சண்முகமும் வாய் திறக்கவில்லை.. சிவக்குமாரும் வாய் திறக்கவில்லை என்பதால், விஷயம் வேகமாக பரவி வருகிறது.

English summary
ADMK CV Shanmugams audio and Local politics in Vizhupuram District
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X