அதிமுக கூட்டணியில் பாமக இணைவது உறுதி?.. தொகுதிகள் பங்கீட்டில் மட்டும் இழுபறி!
Recommended Video

சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக இணைவது உறுதியாகி விட்டதாம். தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வதில்தான் இழுபறி நீடிக்கிறதாம்.
அதிமுக பாஜக கூட்டணியில் பாமகவும் இணைவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதிமுக பாஜக கூட்டணி அமையுமா என்ற கேள்வி இருந்த நிலையில் தற்போது அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகவிட்டதாக தகவல்கள் வெளியாகின
இருந்தாலும் இந்த கூட்டணியில் பாமக உள்ளதா என்ற கேள்வி தொடர்ந்து இருந்து வந்தது இந்த நிலையில் பாமகவும் இந்த கூட்டணியில் இணைவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்தம் போடாமல் கூட்டணி
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட வரும்போதே அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகிவிடும் என்று பாஜகவினர் கூறி வந்த நிலையில் அதற்கான எவ்விதமான சமிக்ஞைகளும் இல்லாமல் இருந்தன. அதற்கேற்றார் போல அதிமுகவில் தம்பிதுரை உள்ளிட்டோரும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி கிட்டத்தட்ட முடிவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

அழுத்திய டெல்லி
அதிமுக பாஜக கூட்டணி டெல்லி அழுத்தம் காரணமாகவே இருதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழக அமைச்சர்களில் டெல்லியில் செல்வாக்கு பெற்ற இரு அமைச்சர்கள் உள்பட சிலர், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் அதி தீவிரமாக செயல்பட்டார்களாம். இவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை ஒத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

நிறைய சிக்கல் வரும்
கூட்டணி அமைக்காவிடில் அதிமுகவுக்கு குறிப்பாக அதிமுக தலைமைக்கு சில பல சிக்கல்கள் எழலாம் என்று கூறப்பட்டதாகவும் அது அல்லாமல் அடுத்து காங்கிரஸ் ஆட்சி வந்தால் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் வேண்டாம் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் திமுக காங்கிரசுடன் இணைந்து கொண்டு அதிமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் என்று டெல்லியில் இருந்து அழுத்தம் வந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே அதிமுக பாஜகவுடன் கூட்டணியை ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

பிரதமர் வருவதற்குள்
வரும் 10 ம் தேதி மீண்டும் தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரவுள்ள நிலையில் அப்போது கூட்டணி குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என்று தெரிகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் இதை சூசகமாக தெரிவித்திருந்தார் இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் இந்திய ஜனநாயக கட்சி, ஈஸ்வரனின் கொங்கு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுவது உறுதியாகிவிட்டது.

எந்தெந்த தொகுதிகள்
ஆனால் தொகுதி பங்கீடு செய்வதில் கடும் இழுபறி நிலவுவதாகவும் அதனாலேயே வெளிப்படையாக அறிவிக்க முடியலாம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. காரணம் அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்புள்ள பல தொகுதிகளை பாஜக கேட்கிறதாம். குறிப்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் எம்.பி யாக இருக்கும் தென்சென்னை உள்ளிட்ட அதிமுகவின் வாக்கு வங்கி அதிகமுள்ள தொகுதிகளை பாஜக கேட்கிறதாம். அதோடு தமாகாவுக்கு தஞ்சையை கொடுக்கலாம் என்று அதிமுக எண்ணுகிறதாம். அதே வேளையில் பாஜக அதை கேட்பதால் அதிலும் இழுபறி நீடிக்கிறதாம்.

தேமுதிக - பாமக
வட மாவட்டங்களில் பாமகவுக்கு தற்போது தேமுதிகவை விட வாக்கு சதவீதம் அதிகம் இருக்கிறது. இதனால் பாமகவை அதிமுகவும், பாஜகவும் வலியுறுத்தி வர வைத்துள்ளனவாம். தற்போது கிடைத்த தகவலின்படி அதிமுக கூட்டணியில்பாமகவுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு ராஜ்யசபா சீட் ஒன்றும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு என்ன நடக்கிறது
திமுக தரப்பில் பாமக பேரம் படியாத சூழலில் அதிமுக பாமகவை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.. 6 தொகுதிகள் 1 ராஜயசபா மற்றும் தேர்தல் செலவுகளுக்கான பணம் என்று அதிமுக தரப்பில் ஒத்துக் கொண்டதால் பாமகவும் திருப்தி அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆக, வரும் 10 ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரும்போது அதிமுக பாஜக கூட்டணி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் என்றே கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications