இது உங்களுக்கு தேவையில்லாத வேலை! வைத்திலிங்கத்தை ரவுண்டு கட்டிய அதிமுக மாவட்டச் செயலாளர்!
சென்னை: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை பார்த்து, இது உங்களுக்கு தேவையில்லாத வேலை என திருச்சி புறநகர் அதிமுக மாவட்டச் செயலாளர் ப.குமார் எகிறிய நிகழ்வு அக்கட்சியின் தலைமை கழகத்தில் நடந்துள்ளது.
மாவட்டச் செயலாளராக இருக்கும் ஒருவர், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான தன்னை பார்த்து இப்படி பேசுவார் என்பதை சற்றும் எதிர்பார்க்காத வைத்திலிங்கம் அப்படியே ஷாக் ஆகியிருக்கிறார்.
ப.குமார் கையில் மைக் கொடுக்கப்பட்டதற்கு வைத்திலிங்கம் எதிர்ப்பு காட்டியதே இந்த ஆவேசத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

மைக்கை கொடுங்கள்
அதிமுகவில் திருச்சி புறநகர மாவட்டச் செயலாளராக இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக அறியப்படுகிறார். ஒற்றைத் தலைமை தான் வேண்டும் அதுவும் எடப்பாடி பழனிசாமி தான் வர வேண்டும் என நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தனது மனதில் தோன்றியதை பேசியிருக்கிறார் ப.குமார். அப்போது குறுக்கிட்ட அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மைக்கை அந்தப் பக்கம் கொடுக்குமாறு கடுகடுத்திருக்கிறார்.

தேவையில்லாத வேலை
இதனால் ப.குமாருக்கு வந்ததே கோபம், ''இது உங்களுக்கு தேவையில்லாத வேலை, நானும் பார்க்கிறேன் ஆரம்பத்தில் இருந்தே திருச்சி மாவட்ட அதிமுகவில் நீங்கள் மூக்கை நுழைத்து வர்றீங்க, தற்போது நடைபெற்ற உட்கட்சித் தேர்தலின் போது கூட தேவையில்லாத வேலை செஞ்சீங்க'' என ஏகத்துக்கும் எகிறியிருக்கிறார். இதனால் முகம் வெளிறிப் போன வைத்திலிங்கம் கடைசி வரை வாயே திறக்காமல் ஆலோசனைக் கூட்டத்தில் அமர்ந்துவிட்டு புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

நிர்வாகிகள் ஆதரவு
வைத்திலிங்கம் பா.குமாரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதை வேடிக்கை பார்த்த எடப்பாடி பழனிசாமி, நல்லா வேணும் என்பதை போல் உள்ளூர அதை ரசித்திருக்கிறார். ப.குமாரின் இந்தப் பேச்சுக்கு அங்கிருந்த நிர்வாகிகள் சிலர் ஆதரவாக குரல் எழுப்பியதால் வைத்திலிங்கம் என்ன செய்வது எனத் தெரியாமல் சைலண்ட் மோடுக்கு சென்றிருக்கிறார். முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு ஆதரவாக திருச்சி அதிமுகவில் வைத்திலிங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளால் ப.குமார் இந்தளவுக்கு டென்ஷன் ஆனாராம்.

ஒரு காலத்தில்
ஒரு காலத்தில் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நால்வர் அணியில் இடம்பெற்றிருந்தவர் வைத்திலிங்கம். அவர் முன்னால் பேசுவதற்கே அச்சப்பட்ட பலரும் இப்போது அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காத சூழல் உருவாகியுள்ளது. காரணம் பதவி இருந்த போது பவுசாக நடந்து கொண்டதே. அமைச்சராக இருந்த போது அனைவரையும் அணுசரித்து கட்சியினர் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திருந்தால் இன்று இந்தளவுக்கு நிலைமை அவருக்கு மோசமாக சென்றிருக்காது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications