திமுக இரட்டை குதிரையில் சவாரி! போலீஸ் ஸ்டேஷன் செல்வது ஸ்கூலுக்கு போற மாதிரி உள்ளது! ஜெயக்குமார் கலகல

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக இரட்டை குதிரையில் சவாரி செய்து வருவதை அறிந்ததால் தான், டெல்லியில் நடைபெற்ற அறிவாலய திறப்பு விழாவுக்கு ராகுல்காந்தி வரவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், தினமும் காவல் நிலையத்துக்கு சென்று கையெழுத்திடுவது ஸ்கூலுக்கு போவது போல் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நிபந்தனை ஜாமினில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பு

செய்தியாளர்கள் சந்திப்பு

ஜனநாயக நாட்டில் அடக்குமுறை எதற்குமே தீர்வாகாது என்றும் தனது விவகாரத்தில் திமுக அரசு நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று எனவும் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். வட சென்னையில் குறிப்பாக ராயபுரம் பகுதியில் அதிமுகவை எழுச்சியுடன் வலிமையாக வைத்துக் கொள்ளும் விதமாக தாம் நாள்தோறும் கையெழுத்திட வருவதாகவும் இனி தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றால் திமுகவை விட அதிமுக 10% வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஜெயக்குமார் விமர்சனம்

ஜெயக்குமார் விமர்சனம்

மேலும், காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தவறு செய்யும் திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் இதுவரை துபாய், டெல்லி என சுற்றுப்பயணம் செய்தவர் இனி மன்னிப்பு கேட்கும் பயணம் செல்ல வேண்டும் எனவும் முதல்வரை விமர்சித்தார் ஜெயக்குமார். தினமும் காவல் நிலையத்துக்கு சென்று கையெழுத்திடுவது நாள்தவறாமல் ஸ்கூலுக்கு போவது போல் உள்ளதாக கூறி அந்த இடத்தை கலகலப்பாக்கினார்.

இரட்டை சவாரி

இரட்டை சவாரி

திமுகவை பொறுத்தவரை இரட்டை குதிரையில் ஒரே நேரத்தில் சவாரி செய்து வருவதாகவும் இது குறித்து அறிந்ததால் தான் டெல்லியில் நடைபெற்ற திமுக அலுவலக திறப்பு விழாவை ராகுல்காந்தி புறக்கணித்துவிட்டார் எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார். தற்போது பாஜகவுடன் திமுக இணக்கமாக செல்லத் தொடங்கியிருப்பதாக கூறிய ஜெயக்குமார், ராகுல்காந்தி டெல்லியில் நடைபெற்ற திமுக அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு என்ன காரணம் என வினவினார்.

நிபந்தனை ஜாமின்

நிபந்தனை ஜாமின்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை பொறுத்தவரை நிபந்தனை ஜாமினில் தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தாலும் கூட, செய்தியாளர்களை கண்டால் சலிக்காமல் நின்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன் தமது மனதில் தோன்றிய கருத்துக்களையும் வெளிப்படுத்தும் வழக்கம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+