அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் அண்ணன் மகன் இளமுருகன் கைது! லஞ்ச வழக்கில் சிபிஐ அதிரடி
சென்னை: புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் அண்ணன் மகன் இளமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். சாலைப் பணி ஒப்பந்தத்தில் தனக்குச் சாதமாகச் செயல்படக் கோரி லஞ்ச கொடுத்த விவகாரத்தில் இளமுருகனை சிபிஐ கைது செய்துள்ளது.
அரசு ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய டென்டர் உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகளை அரசு கொண்டு வந்துள்ளது. அரசு ஒப்பந்தங்களை ஒதுக்குவதில் ஊழல் நடக்கக்கூடாது, அரசுக்குக் கூடுதல் செலவுகள் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், அதையும் தாண்டி ஒப்பந்தங்களைப் பெறச் சிலர் சில குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

காமராஜின் அண்ணன் மகன் கைது
குறிப்பாக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலம் அரசு ஒப்பந்தங்களைப் பெற முயல்கிறார்கள். இதற்கிடையே லஞ்ச வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் அண்ணன் மகன் இளமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சிபிஐ அதிகாரிகள் சற்று நேரத்திற்கு முன்பு கைது செய்தனர்.
என்ன நடந்தது
புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மற்றும் செயற்பொறியாளருக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் இளமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு ஒப்பந்தத்தில் தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட லஞ்சம் கொடுத்த புகாரில் சிபிஐ கைது நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் இளமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கைது நடவடிக்கை
ரூ.7.44 கோடி மதிப்புள்ள சாலை ஒப்பந்தப் பணியில் சாதகமாகக் கையெழுத்திட, அதில் ஒரு சதவீதம் லஞ்சம் என்று புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ரூ.ஆறு லட்சம் லஞ்சமாகக் கேட்டுள்ளனர். அதில் முதலில் இரண்டு லட்ச ரூபாயை லஞ்சமாகக் கொடுக்கும்போது சிபிஐ அதிகாரிகள் அவர்களை கையும் களவுமாகப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து புதுச்சேரி அதிகாரிகளுக்குத் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.73 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை சிபிஐ நடத்தி வந்த நிலையில் தான் இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் அண்ணன் மகன் இளமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications