இன்னும் "தேனிலவே" முடியல.. அதுக்குள்ள தலை தூக்குதே.. போட்டு தாக்கிய செல்லூர் ராஜு!

திமுக அரசை விமர்சித்துள்ளார் செல்லூர் ராஜு

Subscribe to Oneindia Tamil

சென்னை: "திமுக ஆட்சிக்கு வந்தாலே, அதிகாரிகளுக்கு மிரட்டல் உருட்டல்தான்.. இது ரவுடிசம் தலைதூக்குவதற்கான ஆரம்பம்... திமுக ஆட்சிக்கு தேனிலவே முடியவில்லை முடியவில்லை, அதற்குள்ள ரவுடிசம் தலைதூக்குகிறது" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

அதிமுக நிர்வாகிகளில் முக்கியமானவர் செல்லூர் ராஜூ.. இவர் பேட்டிகள் பல சர்ச்சைகளுக்கு உள்ளானாலும், அதிமுகவில் பலம் பொருந்திய முக்கிய புள்ளி ஆவார்.

தற்போது அதிமுக ஆட்சிக்கு வந்துள்ளதால், அதன் செயல்பாடுகளை அனைத்து தரப்புமே பாராட்டி வருகின்றனர்.. ஓபிஎஸ், உட்பட சில அமைச்சர்கள் வாய்விட்டே சொல்லிவிட்டனர்.

 ஜெயக்குமார்

ஜெயக்குமார்

ஆனால், எடப்பாடி பழனிசாமியும், ஜெயக்குமாரும் மட்டும் குறைகளை சொல்ல ஆரம்பித்துள்ளனர்.. அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாக தற்போது இணைந்துள்ளவர் செல்லூர் ராஜூ... செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜு பேசும்போது, திமுகவை விமர்சித்ததுடன், அதிமுக தலைமையில், மறைகமாக ஓடிக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் குறித்தும் பேசினார். அவர் சொன்னதாவது:

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

"கட்சிக்கு ஒருவர் யார் வேண்டுமானாலும் அரசு கூட்டங்களில் கலந்து கொள்ளலாம்... ஈபிஎஸ் ஓபிஎஸ் இரட்டைக்குழல் துப்பாக்கி... எங்களுக்குள் எதுவும் இல்லை. கட்சியை சிறப்பாக நடத்தி வருகின்றனர். ஆனால், திமுக ஆட்சியில் தான் மரண எண்ணிக்கை கூடியுள்ளது... எங்கள் ஆட்சி காலத்தில் நோயாளிகளே இல்லையே.
அதிமுக ஆட்சியில் நோயாளிகள் இல்லையென்பதால்தான் ஆக்ஸிஜன் தேவை இல்லாமல் இருந்தது..

 நடவடிக்கை

நடவடிக்கை

மதுரைக்கு கொரானா தடுப்பூசி குறைவாக வந்துள்ளதாக மதுரை கலெக்டர் தெரிவித்திருந்தார்.. அதிகளவு ஊசிகளை கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.. பள்ளிக்கூடங்கள் பல திறக்காமல் உள்ள நிலையில் அங்கு கொரானா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை கொரானா தொற்று குறைந்துள்ளது. கட்டுப்படுத்தப்படுகிறது. ஊரடங்கு ஒரளவு கைகொடுத்துள்ளது... பணப்புழக்கம் இல்லை... மக்கள் கஷ்டப்படுகிறார்கள்... கூடுதலாக 5000ரூபாய் கொடுக்க முதல்வர் முன்வர வேண்டும்.

மிரட்டல்

மிரட்டல்

திமுக ஆட்சிக்கு வந்தால் அதிகாரிகளுக்கு மிரட்டல் உருட்டல் உள்ளது என எல்லோருக்கு தெரியும். எங்கள் ஆட்சியில் அதிகாரியிடம் நாங்கள் எந்த பிரச்சனைக்காகவும் நேரிலோ தனிப்பட்ட முறையிலோ பேச மாட்டோம். திமுக பிரமுகர் தலையீட்டால் ஜெய்ஹிந்த்புரம் ஆய்வாளர் மாற்றப்பட்டுள்ளார். இது ரவுடிசம் தலைதூக்குவதற்கான ஆரம்பம். திமுக ஆட்சிக்கு தேனிலவே முடியவில்லை முடியவில்லை அதற்குள் ரவுடிசம் தலைதூக்குகிறது...!" என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+