சாப்பாடு வீணா போச்சு சரி.. “வேற” கம்ப்ளெயிண்ட் வந்துச்சா? எங்க மாநாடு வெற்றி.. அதிமுக நிர்வாகி பரபர!
சென்னை: அதிமுக மாநாடு வெற்றி, இப்படி பேசி அதன் வெற்றியை மறைக்க முடியாது என அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையம் அருகே அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் இந்த மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டம் தீட்டி கடந்த ஒரு மாதமாக அதிமுகவினர் தீவிரமாக உழைத்தனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் மதுரையே அல்லோல கல்லோலப்பட்டது.

மாநாட்டில் பங்கேற்கும் அதிமுக தொண்டர்களுக்கான உணவு தயாரிக்கும் பணிகள் மாநாட்டுக்கு முந்தைய நாள் இரவு முதலே தொடங்கி மும்முரமாக நடைபெற்று வந்தது. மாநாடு நடைபெற்ற திடலில் இரு புறத்திலும் உணவுகள் தயாரிக்கப்பட்டன. அங்கு தயாரிக்கப்பட்ட உணவுகள் சுவையாக இல்லாததாலும், உணவு வேகாததாலும், தொண்டர்கள் இந்த உணவை சாப்பிடாமல் சென்றதால் டன் கணக்கில் உணவு வீணாக கொட்டப்பட்டுள்ளது.
மாநாடு முடிந்த நிலையில் மாநாட்டு பந்தலில் அண்டா, அண்டாவாக டன் கணக்கில் தொண்டர்களுக்காக தயார் செய்த புளியோதரை உணவுகள் கொட்டப்பட்டு கிடந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. உணவுகளை இப்படி பொறுப்பு இல்லாமல் மாநாட்டு சமையல் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே கொட்டிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் ஏராளமான உணவு வீணடிக்கப்பட்டதாக புகைப்படங்கள் வெளியான நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆமா சாப்பாடு வீண் ஆகக்கூடாது, அது சரி தான். யாரும் வேண்டுமென்றே வீண் செய்யலேயே, அடுத்த முறை கவனமா இருக்கணும், அதுவும் சரி தான், அதோட முடிஞ்சது.
பரோட்டா கடை மொபைல் கடை, டீ கடை-னு, கடை கடையா சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்கலைனு மதுரையில ஏதாவது ஒரு கடைல சண்டை வந்துச்சா.. இல்லை பெண்கள் தவறா யாரோ நடந்துட்டாங்கனு கம்ப்ளெயிண்ட் பண்ணாங்களா, இல்லை மாநாடு முழுவதும் டாஸ்மாக் பாட்டில்களா கிடந்ததா? இப்படி எல்லாம் இதுக்கு முன்னாடி பண்ணுனது திமுக தான். நாம் செய்திகளில் பார்த்தோம்.

சாப்பாட்ட பத்தி இவ்வளோ பேசுற திமுக நபர்கள், அப்படியே இத பத்தியும் பேசலாமே! எவ்வளவு கண்ணியமா அதிமுக மாநாடு நடந்திருந்தா சாப்பாடு பிரச்சனைய பத்தி இப்படி பேசுவீங்க? காரணம், பேச வேறு எதுவும் இல்லை! மாநாடு வெற்றி, வெற்றியே, இப்படி பேசி அதன் வெற்றியை மறைக்க முடியாது! அடுத்த முறை சாப்பாடு அளவில் கவனமாக இருப்போம், அவ்வளவு தான். முற்றும்!" எனத் தெரிவித்துள்ளார்.
-
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா?












Click it and Unblock the Notifications