'தவ வாழ்க்கை' வாழ்ந்த சசிகலாவை யார் தவறாக பேசினாலும் பொறுக்க முடியாது.. கோகுல இந்திரா கொந்தளிப்பு
சென்னை: தவ வாழ்க்கை வாழ்ந்த சசிகலாவை யார் தவறாக பேசினாலும் பொறுத்துக் கொள்ள முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆவேசமாக கூறியுள்ளார்.
Recommended Video

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறைவாசம் அனுபவித்து வருகிறார் சசிகலா. அவர் வரும் 27-ந் தேதி விடுதலையாக உள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் என்ன பிரளயத்தை ஏற்படுத்தும் என்பது விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து சசிகலாவுக்கு ஆதரவு குரல்கள் வர தொடங்கி உள்ளன.
அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா செய்தியாளர்களிடம் பேசுகையில், சசிகலா எந்த கட்சிக்கு தலைவராக இருந்தாலும் மதிப்பிற்குரியவர்தான். ஜெயலலிதாவின் நலனுக்காக தவ வாழ்க்கை வாழ்ந்தவர்.
சசிகலாவை யார் தவறாக பேசினாலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்றார். ஏற்கனவே சசிகலாவை அதிமுகவில் சேர்த்து கொள்ளமாட்டோம் என அமைச்சர்கள் பலரும் கூறி வரும் நிலையில் கோகுல இந்திரா வெளிப்படையாக சசிகலாவை ஆதரித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications