அரசியலில் விஜய்: யார் வேணாலும் கட்சி தொடங்கலாம்.. எங்க ஓட்டுல கை வைக்க முடியாது.. அதிமுக மாஜி பரபர!
சென்னை: விஜய், அரசியல் பிரவேசத்துக்கு தயாராகி வருவதை அவரது பேச்சு உறுதி செய்துள்ள நிலையில், "யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்" எனத் தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர போகிறார் என நீண்டகாலமாகவே பேச்சுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்தி அரசியலில் நுழைவதற்கான முதற்கட்ட பணிகளை விஜய் செய்து வருக்கிறார். நேற்று நடந்த 'லியோ' படத்தின் வெற்றி விழாவில் விஜய் தான் சந்தித்த சர்ச்சைகளுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருக்கிறார்.

2026 தேர்தலின்போது விஜய் அரசியலுக்கு வருவாரா என்கிற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் நிலையில் அது பற்றி லியோ வெற்றி விழாவில் விஜய்யிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் 'கப்பு முக்கியம் பிகிலு' எனக் கூறி இருக்கிறார். தனது அரசியல் வருகையையே அவர் மறைமுகமாக கூறியுள்ளதாகவும், விஜய் அரசியலுக்கு வருவது நிச்சயம் என்றும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
விஜய்யின் அரசியல் பிரவேசம் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து தனியார் செய்தி ஊடகத்திடம் பேசியுள்ளார்.
அப்போது, "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். எல்லோருக்கும் கட்சி ஆரம்பிக்க உரிமை உண்டு. அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் இருக்கும். விஜய் தனது கருத்தை மறைமுகமாகவோ, நேரடியாகவோ தெரிவித்துள்ளார் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்.
கட்சி தொடங்குவது பெரிதல்ல, மக்கள் செல்வாக்கை பெறுவதே முக்கியம். மக்கள் தான் தீர்ப்பளிக்கப் போகிறார்கள். யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். எம்.ஜி.ஆர் என்பவர் ஒரு சகாப்தம் யாரும் - எவரும் அவருக்கு இணையாக முடியாது. 31 ஆண்டுகாலம் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி அதிமுக. தற்போது தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை." எனத் தெரிவித்துள்ளார் ஜெயக்குமார்.

மேலும், நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தால் அவர் அதிமுகவிற்கு அச்சுறுத்தலாக இருப்பாரா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, "அப்படியெல்லாம் இருக்கப் போவதில்லை. அதிமுகவிற்கு விஜய் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வாக்குகளை யாரும் கை வைக்க முடியாது" என்றார் ஜெயக்குமார்.
முன்னதாக, "விஜய் உள்பட நிறைய புதியவர்கள் அரசியலுக்கு வரட்டும். அவர்கள் எல்லோரும் மாற்று அரசியலை முன்வைக்கட்டும். தமிழக மக்கள் யாரை முடிவு செய்கிறார்களோ அதை ஏற்றுக்கொள்ளலாம்" என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்











Click it and Unblock the Notifications